உச்ச நீதிமன்றம் | கோப்புப்படம் 
தமிழகம்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ பற்றி ஆராயும் நாடாளுமன்ற குழுவுடனான சந்திப்பை ரத்து செய்த நீதிமன்றம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளு​மன்​றத்​தில் அறி​முகப்​படுத்​தப்​பட்ட ‘ஒரே நாடு, ஒரே தேர்​தல்’ தொடர்​பான சட்ட மசோ​தாக்​கள் குறித்து ஆய்வு செய்ய பாஜக உறுப்​பினர் பி.பி.சவுத்ரி தலை​மை​யில் நாடாளு​மன்​றக் கூட்​டுக் குழு அமைக்​கப்​பட்​டது.

மக்​களவை, மாநில சட்​டப்​பேர​வை​களுக்கு ஒரே நேரத்​தில் தேர்​தல்​களை நடத்​து​வது தொடர்​பான மசோதா குறித்து ஆய்வு செய்​யும் இந்தக் குழு, உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி மற்​றும் நீதிப​தி​களை அக்​டோபர் 6-ம் தேதி சந்​தித்து ஆலோ​சனை நடத்த திட்​ட​மிட்​டிருந்​தது. ஆனால், சட்​டம் இயற்​றும் நாடாளு​மன்​றத்​தின் குழு​வானது, சட்​டத்​தின் செல்​லுபடி​யாகும் தன்​மையை ஆய்வு செய்​யும் நீதித்​துறை அதி​காரி​களு​டன் கலந்​துரை​யாடு​வது அரசி​யலமைப்​புக்கு எதி​ரானது என எதிர்க்​கட்​சிகள் விமர்​சனம் செய்​தன.

இந்​நிலை​யில், நாடாளு​மன்​றக் கூட்​டுக் குழு​வுட​னான கூட்​டத்தை உச்ச நீதி​மன்​றம் ரத்து செய்​துள்​ளது. இதுகுறித்து குழு​வுக்கு அனுப்​பப்​பட்ட தகவலில், “இந்​தத் திருத்​தம் எதிர்​காலத்​தில் நீதி​மன்ற ஆய்​வுக்கு உட்​படுத்​தப்​படலாம் என்​ப​தால் நிர்​வாக ரீதி​யாக இதுகுறித்து விவா​திப்​பது பொருத்​த​மான​தாக இருக்​காது” என்று தெரி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT