தமிழகம்

சிறையில் இருந்து பரோலில் வந்து தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற சவுக்கு சங்கர்

பழனிசாமி, நயினார் நாகேந்திரன், டிடிவி தினகரன், சீமான் இரங்கல்

செய்திப்பிரிவு

சென்னை: தனது தாயாரின் இறு​திச் சடங்​கில் பரோலில் வந்து சவுக்கு சங்​கர் பங்​கேற்​றார். சவுக்கு சங்​கர் தாயாரின் மறைவுக்கு பழனி​சாமி உட்பட பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​தனர்.

சவுக்கு மீடியா சிஇஓ​வும் யூடியூபரு​மான சங்​கர் மீதான இரு மோசடி வழக்​கு​களில், ஆதம்​பாக்​கம், சைதாப்​பேட்டை போலீ​ஸார் அவரை 2025 டிச.13-ம் தேதி கைது செய்​தனர்.

அவரை ஜாமீனில் விடுவிக்​கக் ​கோரி அவரது தாயார் கமலா தாக்​கல் செய்​திருந்த மனுவை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம் மார்ச் 25 வரை அவருக்கு இடைக்​கால நிபந்​தனை ஜாமீன் வழங்கி உத்​தர​விட்​டது. அன்​றைய​தினம் அவர் நீதி​மன்​றத்​தில் ஆஜரா​காத​தால், அவரை தலைமறைவு குற்​ற​வாளி​யாக அறி​வித்து போலீ​ஸார் தேடி வந்​தனர்.

          

பின்​னர் ஆந்​தி​ரா​வில் சவுக்கு சங்​கர் கடந்த வாரம் கைது செய்​யப்​பட்டு புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். அவர் மீது குண்​டர் தடுப்பு சட்​டத்​தின் கீழும் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது.

இதற்​கிடையே உடல்​நலக்​குறைவு காரண​மாக, சவுக்கு சங்​கரின் தாயார் கமலா நேற்று முன்​தினம் கால​மா​னார். பெங்​களூரு வில்​சன் கார்​டன் மின் மயானத்​தில் நேற்று நடை​பெற இருந்த தயாரின் இறு​திச் சடங்​கில், பங்​கேற்க சவுக்கு சங்​கருக்கு ஏப்​.13 இரவு 8 மணி முதல் ஏப்​.16 இரவு 8 மணி வரை பரோல் வழங்​கப்​பட்​டது.

அதைத்​தொடர்ந்து தாயார் கமலா​வின் இறு​திச் சடங்​கில் சவுக்கு சங்​கர் கலந்து கொண்​டார். சவுக்கு சங்​கரின் தாயார் மறைவுக்கு அரசி​யல் தலை​வர்​கள் வெளி​யிட்ட இரங்​கல் செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது:

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: யூடியூபர் சவுக்கு சங்​கரின் தாயார் கமலா உடல்​நலக்​ குறை​வால் கால​மான செய்​தி​யறிந்து மிகுந்த துயருற்​றேன்.

தனது மகன் திமுக அரசை எதிர்த்து பேசிய ஒரே காரணத்​துக்​காக, காவல் ​துறை​யால், திமுக மற்​றும் கூட்​டணி கட்சி குண்​டர்​களால் அவர் சந்​தித்த துயரங்​கள் ஏராளம். தாயை இழந்து வாடும் சவுக்கு சங்​கருக்கு எனது ஆழ்ந்த இரங்​கல்​கள்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: சவுக்கு சங்​கரின் தாயார் மறைவு செய்​தி​கேட்டு வருத்​தம் அடைந்​தேன். இந்த கடின நேரத்​தில் சவுக்கு சங்​கரின் குடும்​பத்​தினருக்கு என் ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: சவுக்கு சங்​கரின் தாயார் கால​மான செய்தி வருத்​தத்​தை​ அளிக்​கிறது. சவுக்கு சங்​கருக்கு எனது ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான்: சவுக்கு சங்​கரின் தா​யார் மறைந்த செய்​தி​யறிந்து ஆழ்ந்த மனத்​துயர் அடைந்​தேன். சவுக்கு சங்​கருக்கு எனது ஆறு​தலை தெரி​வித்​துக் கொள்கிறேன்.

SCROLL FOR NEXT