தமிழகம்

சவுக்கு மீடியா சிஇஓ சங்கர் ஜாமீனில் வெளியே வந்தார்!

செய்திப்பிரிவு

சவுக்கு மீடியா என்ற யூடியூப் சேனலின் சிஇஓ சங்கர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சங்கர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆதம்பாக்கம், சைதாப்பேட்டை போலீஸார் பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் கடந்த 13-ம் தேதி கைது செய்யப்பட்ட சங்கர், சிறையில் அடைக்கப்பட்டார். அவரது தாய் கமலா நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள், 12 நிபந்தனைகளுடன், 17 குற்ற வழக்குகள் தொடர்பாக சவுக்கு சங்கருக்கு மார்ச் 25-ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.

இந்நிலையில், நேற்று காலை சவுக்கு சங்கர் புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த சவுக்கு சங்கரை, அவரது வழக்கறிஞர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

SCROLL FOR NEXT