தமிழகம்

சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஆக்கிரமிப்பு நிலத்துக்கு பதிலாக வேறு நிலத்தை ஏன் பெறக்கூடாது? - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

சல்மான்

புதுடெல்லி: தஞ்​சாவூர் மாவட்​டம் திரு​மலைச​முத்​திரத்​தில் திறந்​தவெளி சிறைச்​சாலை அமைக்க ஒதுக்​கப்​பட்​டிருந்த 31.37 ஏக்​கர் புஞ்சை தரிசு நிலத்​தை, சாஸ்த்ரா பல்​கலைக்​கழகம் ஆக்​கிரமிப்பு செய்​து, அந்த நிலத்​தில் பெரிய அளவில் கட்​டிடங்​கள் கட்​டி, வகுப்​பு​களை நடத்தி வரு​வ​தாக புகார்​கள் எழுந்​தன.

இதுதொடர்​பாக சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடரப்​பட்​டது. அந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், சாஸ்த்ரா பல்​கலைக்​கழகத்​தால் ஆக்​கிரமிப்பு செய்​யப்​பட்ட நிலத்தை வரு​வாய்த் துறை மீட்கவேண்​டும் என்று கடந்த ஜனவரி 9-ம் தேதி உத்​தர​விட்​டது.

இந்த உத்​தரவை எதிர்த்து சாஸ்த்ரா பல்​கலைக்​கழகம் செய்த மேல் முறையீீட்டில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்​கால தடை விதித்​தது. இந்த நிலை​யில் சாஸ்த்ரா பல்​கலைக்​கழக நிலம் தொடர்​பான வழக்கு உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்​றும் நீதிப​தி​கள் ஜாய்​மால்யா பக் ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் மீண்​டும் விசா​ரணைக்கு வந்தது.

அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் சி.எஸ்​.​வைத்​தி​ய​நாதன், தற்​போது பல்​கலைக்​கழகம் அமைந்​துள்ள அந்த இடத்​திற்கு பதிலாக 5 கிலோ மீட்​டர் தொலை​வில் உள்ள பல்​கலைக்​கழகத்​துக்கு சொந்​த​மான வேறு இடத்தை வழங்​க​வும் அல்​லது சந்தை மதிப்​பின் அடிப்​படை​யில் நிலத்​துக்​கான பணத்தை அரசுக்கு செலுத்​த​வும் தயா​ராக இருப்​ப​தாக தெரி​வித்​தார்.

அதனைத் தொடர்ந்து நீதிப​தி​கள், சம்​பந்​தப்​பட்ட நிலத்​தில் தற்​போது கல்வி நிலை​யம் செயல்​பட்டு வரு​வ​தால் அதற்கு பதிலாக வேறு நிலத்தை அரசு ஏன் பெற்​றுக் கொள்​ளக் கூடாது? என கேள்வி எழுப்​பினர்.

அதற்கு பதில் அளித்த தமிழக அரசின் கூடு​தல் தலைமை வழக்​கறிஞர் ஹரிப்​ரியா மற்​றும் மூத்த வழக்​கறிஞர் ஜெய்​தீப் குப்தா ஆகியோர், “இந்த நிலம் தொடர்​பான வழக்கை கடந்த காலத்​தில் சென்னை உயர் நீதி​மன்​றம் மற்றும் உச்ச நீதி​மன்​ற​மும் தள்​ளு​படி செய்​திருக்​கிறது. ஆனால் தற்​போது மீண்​டும் அதே விவ​காரத்தை உச்ச நீதி​மன்​றத்​தில் சாஸ்த்ரா பல்​கலைக்​கழக தரப்பு எழுப்பி வரு​கிறது. அரசு நிலம் ஆக்​கிரமிக்​கப்​படு​வதை அனு​ம​திக்க முடி​யாது” என தெரி​வித்​தனர்.

ஆனால் அந்த வாதத்தை முழு​மை​யாக ஏற்க மறுத்த நீதிப​தி​கள், தற்​போது அங்கு ஒரு பல்​கலைக்​கழகம் கல்விக்​காக செயல்​பட்டு வரு​வதன் காரண​மாக இந்த விவ​காரத்தை தமிழக அரசு கருத்​தில் கொள்​ளலாமே, வேறு ஒரு இடத்​தில் நிலத்தை பெற்​றுக் கொள்ள என்ன பிரச்​சினை உள்​ளது? என வின​வியதோடு, இந்த விவ​காரத்​தில் அரசு ஒரு உரிய முடிவை எடுக்​கலாமே? என்​றும் யோசனை தெரி​வித்​தனர்.

அப்​போது, இந்த விவ​காரத்​தில் உரிய விளக்​கம் பெற்​றுத் தெரிவிக்க ஏது​வாக, வழக்கை 4 வார காலத்​திற்கு ஒத்​திவைக்க வேண்​டுமென தமிழக அரசு தரப்​பில் கோரிக்கை வைக்​கப்​பட்​டது. இதனையடுத்து நீதிப​தி​கள், ஆக்​கிரமிக்​கப்​பட்​ட​தாக கூறப்​படும் இடத்​தில் கல்​வி நிலை​யம்​ செயல்​பட்​டு வரும்​ நிலை​யில்​ தற்​போது அந்​த இடத்​துக்​கு பதிலாக வேறு நிலத்​தை பெற்​றுக்​கொள்​வது குறித்​து ஆலோ​சனை நடத்​தி தமிழக அரசு பதில்​ மனு​ ​தாக்​கல்​ செய்​ய உத்​தரவிட்​டு வழக்​கை ஒத்​திவைத்​தனர்​.

SCROLL FOR NEXT