சரத்குமார்

 
தமிழகம்

“தேர்தலில் போட்டியில்லை என்பதில் உறுதி” - சரத்குமார் மீண்டும் அறிவிப்பு

செய்திப்பிரிவு

தேர்தலில் போட்டியிடவில்லை என்ற முடிவில் உறுதியாக இருப்பதாக நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று கமலாலயத்தில் நடிகர் சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கட்சியில் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற என்னுடைய கோரிக்கையை கட்சி பார்த்துக் கொள்ளும். நான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை மறு பரிசீலனை செய்யப் போவதில்லை. ஒருமுறை அந்த முடிவை எடுத்துவிட்டால் எடுத்தது தான்.

என்னை போட்டியிடுங்கள் என்று சொன்னால் கூட, தேர்தலில் பணி செய்யாமல் என்னால் போட்டியிட முடியாது. அதனால், என்னுடன் இருப்பவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று தான் இன்று வரை அவர்களிடம் கூறி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

          
SCROLL FOR NEXT