சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மூன்றாவது கட்டமாக 17 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக பி.சந்தானகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் அதிமுகவில் ஏற்கெனவே 150 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் இரண்டு கட்டங்களாக வெளியிடப்பட்டது.
கூட்டணி கட்சிகளுக்கு 67 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ள நிலையில், 167 தொகுதிகளில் அக்கட்சி போட்டியிடுகிறது.
சென்னை மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் உள்ளிட்ட 17 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
அதிமுக 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல்:
1. ஆயிரம் விளக்கு - முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி
2. அண்ணாநகர் - முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா
3. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - ஆதிராஜாராம்
4. திட்டக்குடி (தனி) - முருகுமாறன்
5. துறைமுகம் - ராயபுரம் ஆர்.மனோ
6. விருகம்பாக்கம் - விருகை வி.என்.ரவி
7. தியாகராய நகர் - சத்தியநாராயணன்
8. வேளச்சேரி - அசோக்
9. சோழிங்கநல்லூர் - கந்தன்
10. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - ஆர்.எஸ்.ராஜேஷ்
11. வில்லிவாக்கம் - எஸ்.ஆர்.விஜயகுமார்
12. திருச்சுழி - ராஜவர்மன்
13. ஆலந்தூர் - சரவணன்
14. கொளத்தூர் - சந்தானகிருஷ்ணன்
15. திரு.வி.க நகர் (தனி) - பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
16. எழும்பூர் (தனி) - அபிஷேக் ரங்கசாமி
17. ஆலங்குடி - விமல்