தமிழகம்

மணல் கடத்தலால் அரசுக்கு ரூ.1,000 கோடி இழப்பு: மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

நாமக்​கல்: தமிழகத்​தில் சட்​ட​விரோத​மாக மணல் மற்​றும் கிராவல் எடுப்​ப​தால் அரசுக்கு ரூ. 1,000 கோடி அளவுக்கு வரு​வாய் இழப்பு ஏற்​பட்​டுள்​ளது, என தமிழ்​நாடு மணல் லாரி உரிமை​யாளர்​கள் சம்​மேளன தலை​வர் செல்​ல.​ரா​சாமணி தெரி​வித்​தார்.

இதுகுறித்து அவர் நாமக்​கல்​லில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: மயி​லாடு​துறை, திருச்​சி, கோவை, திருப்​பூர், ஈரோடு, மதுரை உள்​ளிட்ட மாவட்​டங்​களில் கிராவல் மண் எடுக்​கும் பணி​களில் கடந்த 2 ஆண்​டு​களாக பெரும் அளவில் சட்​ட​விரோத செயல்​பாடு​கள் நடை​பெற்று வரு​கிறது.

          

இந்த முறை​கேடு​களுக்கு மயி​லாடு​துறை மாவட்​டத்​தைச் சேர்ந்த தனி​நபர் தலை​மையேற்று பல பினாமிகள் பெயரில் மாநிலம் முழு​வதும் கிராவல் மண் எடுக்​கும் உரிமை​களை பெற்​றுள்​ளார்.

அவ்​வாறு அனு​மதி பெற்ற பட்டா நிலங்​களோடு மட்​டுமல்​லாமல், அனு​மதி பெறாத பட்டா நிலங்​கள் மற்​றும் அரசு புறம்​போக்கு நிலங்​களி​லும் சட்​ட​விரோத​மாக மணல் மற்​றும் கிராவல் எடுப்​பது நடை​பெற்று வரு​கிறது.

அதி​கப்​படி​யான அளவில் தினசரி ஆயிரக்​கணக்​கான லாரி​களில் கிராவல் மண் எடுக்​கப்​பட்டு கடத்​தப்​படு​கிறது. குறிப்​பாக அனு​மதி அளிக்​கப்​பட்ட 40 மீட்​டர் ஆழத்​துக்கு மாறாக அதற்கு மீறிய ஆழத்​தி​லும் மண் வெட்டி எடுக்​கப்​படு​கிறது.

மேலும், போலி​யான அனு​மதி சீட்​டு​கள் பயன்​படுத்​தப்​படு​வ​தால், உண்​மை​யான லாரி உரிமை​யாளர்​கள் மற்​றும் ஓட்​டுநர்​கள் சிக்கி கைது செய்​யப்​படு​கின்​றனர்.

இத்​துடன், கனிமத் துறை அதி​காரி​களுக்​கும் புகார் அளித்​தா​லும், அவர்​கள் உரிய நடவடிக்கை எடுப்​ப​தில்​லை.

இதன்​மூலம் தமிழக அரசுக்கு ரூ.1,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்​பட்​டுள்​ளது. இந்த முறை​கேட்​டில் ஈடு​பட்​ட​தாக கூறப்​படும் நபர்​கள் மற்​றும் அவர்​களுக்கு துணைபுரிந்த அரசு அதி​காரி​கள் மீதும் அரசு கடுமை​யான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்வாறு கூறினார்.

SCROLL FOR NEXT