தமிழகம்

கூட்டுறவு அங்காடிகளில் ரூ.200-க்கு 10 மளிகைப் பொருட்கள் தொகுப்பு விற்பனை தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் கூட்​டுறவு அங்​காடிகள் மூலம் அத்​தி​ய​வாசி​ய​மான 10 மளி​கைப் பொருட்​கள் அடங்​கிய சிறப்​புத் தொகுப்பை ரூ.200-க்கு விற்​பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்​தது.

இந்​தத் திட்​டத்தை கூட்டுறவுத் துறை அமைச்​சர் வ.காந்​திராஜ் சென்னை செங்​குன்​றத்​தில் உள்ள மருதம் கூட்​டுறவு சிறப்​பங்​காடி​யில் நேற்று தொடங்கி வைத்​தார்.

இதில் கடலைப் பருப்பு, பாசிப்​பருப்பு, புளி தலா 250 கிராம், கடுகு, மிளகாய், உளுந்​தம் பருப்பு தலா 100 கிராம், தனியா, பூண்டு தலா 150 கிராம், சீரகம், சோம்பு தலா 50 கிராம் என மொத்​தம் 1,450 கிராம் எடை கொண்ட 10 வகை​யான மளி​கைப் பொருட்​கள் இடம்​பெற்​றுள்​ளன.

இந்​தத் தொகுப்பு மாநக​ராட்​சிகள் அல்​லாத பகுதி​களில் உள்ள 128 கூட்​டுறவு விற்​பனை நிலை​யங்​களில் விற்​பனை செய்​யப்​படும். முதல்​கட்​ட​மாக தரு​மபுரி, திரு​வாரூர், புதுக்​கோட்டை உள்​ளிட்ட 7 மாவட்​டங்​களில் நேற்று விற்​பனை தொடங்​கியது.

எஞ்​சிய மாவட்​டங்​களில் இன்று (அக்​டோபர் 31) முதல் விற்​பனை தொடங்​கும். இது​த​விர மாநக​ராட்​சிப் பகுதி​களில் உள்ள அரசு விற்​பனை நிலை​யங்​களில் மற்ற பல சரக்குகளின் விலை 10 சதவீதம் குறைக்​கப்​பட்​டுள்​ள​து.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT