தமிழகம்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: டாஸ்​மாக் ஊழியர்​களுக்கு 25 சதவீதம் ஊதிய உயர்வு வழங்​கப்​படு​வ​தாக​வும், இனி கூடு​தல் விலைக்கு விற்​பனை செய்யப்​பட்​டால் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் எனவும் அமைச்​சர் விக்​னேஷ் தெரி​வித்​தார்.

இதுதொடர்​பாக மது​விலக்கு மற்​றும் ஆயத்​தீர்வை துறை அமைச்சர் விக்​னேஷ் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் செய்தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது:

டாஸ்​மாக் துறை​யில் பல்​வேறு மாற்​றங்​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. அதன்​படி எம்​ஆர்பி விலை​யை​விட கூடு​தலாக ரூ.10 வசூலிக்​கும் நடை​முறையை ஒழிப்​ப​தற்​காக, சம்​பந்​தப்​பட்ட ஊழியர்​கள் மீது தொடர் நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வருகின்றன. இந்​நிலை​யில் டாஸ்​மாக் ஊழியர்​கள் தங்​களுக்கு நியாய​மான ஊதிய உயர்வு தர வேண்​டுமென கோரினர்.

இது​வரை டாஸ்​மாக் ஊழியர்​களுக்கு வழங்​கப்​பட்ட ஊதிய உயர்வு அதி​கபட்​ச​மாக ரூ.2,000 மட்​டுமே இருந்​தது. ஆனால், இந்த முறை முதல்​வர் ஊழியர்​களின் கோரிக்​கையை பரிசீலித்து 25 சதவீத ஊதிய உயர்வை வழங்க உத்​தர​விட்​டுள்​ளார்.

அதன்​படி உதவி விற்​பனை​யாளர்​களுக்கு தற்​போதைய ரூ.14,340-ல் இருந்து ரூ.17,925 ஆகவும், விற்​பனை​யாளர்​களுக்கு ரூ.15,530-ல் இருந்து ரூ.19,413 ஆகவும், மேற்​பார்​வை​யாளர்​களுக்கு ரூ.17,850-ல் இருந்து ரூ.22,313 ஆகவும் ஊதி​யம் உயர்த்​தப்​படு​கிறது. இதன்​மூலம் அரசுக்கு ரூ.110.74 கோடி கூடு​தல் செல​வாகும். டாஸ்​மாக் ஊழியர்​களின் மொத்த ஆண்டு ஊதி​யச் செலவு ரூ.553.72 கோடி​யாக உயர்​கிறது. இனி டாஸ்​மாக் ஊழியர்​களுக்​கும், அவர்​கள் குடும்​பத்​தினருக்​கும் இஎஸ்ஐ மருத்​துவ வசதி வழங்​கப்​படும்.

இனி எம்​ஆர்​பிக்கு மேல் மது​பானம் விற்​கக்​கூ​டாது. அரசு நிர்ணயித்த விலைக்கே மது​பானங்​கள் விற்​கப்பட வேண்​டும்.

முன்​ன​தாக கூடு​தல் தொகை வசூலித்​தவர்​களுக்கு அபராதம் விதிக்​கப்​பட்​டது. தற்​போது இடைநீக்​கம் செய்​யப்​படு​கிறது. அதே குற்​றத்தை மீண்​டும் செய்​தால் பணிநீக்​கம் வரை நடவடிக்கை எடுக்​கப்​படும். எனினும், ஊதிய உயர்​வுக்​காக மது​பான விலை உயர்த்​தப்​ப​டாது. ஊதிய உயர்வு ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரும். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT