தமிழகம்

மீண்டும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: நடிகர் எஸ்​.வி.சேகர் கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: விலக்​கிக் கொள்​ளப்​பட்ட துப்​பாக்கி ஏந்​திய போலீஸ் பாது​காப்பை தனக்கு மீண்​டும் வழங்க வேண்​டும் என நடிகர் எஸ்வி சேகர், காவல் ஆணை​யரிடம் கோரிக்கை விடுத்​துள்​ளார்.

நடிகரும், முன்​னாள் மயி​லாப்​பூர் எம்​எல்​ஏ-வு​மான எஸ்​.​வி. சேகருக்கு துப்​பாக்கி ஏந்​திய போலீஸ் பாது​காப்பு வழங்​கப்​பட்டு இருந்​தது. அவருக்கு அச்​சுறுத்​தல் இல்லை என்ற முடிவுக்கு வந்த போலீ​ஸார் அவருக்​கான பாது​காப்பை விலக்கிக் கொண்​டனர்.

இதையடுத்​து, நேற்று காவல் ஆணை​யரகத்​துக்கு நேரில் வந்த எஸ்​.வி சேகர், காவல் ஆணை​யர் அமல்​ராஜை சந்​தித்து தனக்கு மீண்​டும் துப்​பாக்கி ஏந்​திய போலீஸ் பாது​காப்பு வழங்க வேண்​டும் என கோரிக்கை விடுத்​தார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் பேசிய எஸ்​.​வி.சேகர் கூறிய​தாவது: கடந்த 1992-ம் ஆண்டு முதல் தனக்​கும் தனது குடும்​பத்​தினருக்​கும் தொடர்ந்து மிரட்​டல்​கள் வந்து கொண்​டிருக்​கின்​றன.

எனது வீட்​டின் மீது 2 முறை பெட்​ரோல் குண்டு வீச்சு மற்​றும் 3 முறை கல் வீச்சு சம்​பவங்​கள் நடை​பெற்​றுள்​ளன. இது​வரை 82 முறை வெடிகுண்டு மிரட்​டல்​கள் வந்​துள்​ளன.கடந்த பிப்​ர​வரி மாதம் நடை​பெற்ற காவல்​துறை ஆலோ​சனை கூட்​டத்​துக்கு பிறகு தனக்கு வழங்​கப்​பட்டு வந்த போலீஸ் பாது​காப்பு விலக்​கிக் கொள்​ளப்​பட்​டது.

எனவே மீண்​டும் துப்​பாக்கி ஏந்​திய போலீஸ் பாது​காப்பு வழங்க வேண்​டும் என்று முதல்​வரிடம் கோரிக்கை விடுத்​துள்​ளேன்.தற்​போது நான் எந்த அரசி​யல் கட்​சி​யிலும் இல்​லை. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT