தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளுக்கு அரசாணை வழங்கக் கோரி, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள். | படம்: ம.பிரபு |

 
தமிழகம்

அரசால் ஏற்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அரசாணை கேட்டு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

கைது நடவடிக்கைக்கு ஏஐடியுசி கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: அரசு ஏற்​றுக் கொண்ட கோரிக்​கைகளுக்கு அரசாணை வழங்​கும் வரை டிச.8-ம் தேதிமுதல் கால​வரையற்ற காத்​திருப்பு போராட்டம் நடத்​தப்​படும் என தமிழ்​நாடு ஊரக வளர்ச்​சித் துறை தொழிலாளர்கள் சங்​கம் அறி​வித்​திருந்​தது.

அதன்​படி ஊரக வளர்ச்​சித் துறை இயக்​குநர் அலு​வல​கம் அமைந்​துள்ள சைதாப்​பேட்டை பனகல் மாளிகை அருகே தொழிலா​ளர்​களின் காத்​திருப்பு போராட்டம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்​கியது.

தூய்​மைப் பணி​யாளர்​கள் மற்​றும் சுகா​தார ஊக்​குநர்​களுக்கு குறைந்​த​பட்ச ஊதி​யம் வழங்​கப்பட வேண்​டும், தற்​காலிக பணி​யாளர்​களுக்கு இஎஸ்ஐ மூலம் மருத்​துவ வசதி, மேல்​நிலைத் தொட்டி இயக்​கு​வோருக்​கும் தூய்​மைப் பணி​யாளர்​களுக்​கும் சத்​துணவு ஊழியர்​களுக்கு இணை​யான சலுகைகள், பள்ளி தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு உட்பட அரசால் ஏற்​கப்​பட்ட 12 கோரிக்கைகளை நிறைவேற்​று​வது தொடர்​பான அரசாணை​களை உடனடி​யாக வெளி​யிட வேண்டும் என்று தொழிலா​ளர்​கள் கோஷமிட்​டனர். கால​வரையற்ற போராட்​டத்​தில் ஈடு​பட்ட அவர்​களை போலீ​ஸார் கைதுசெய்​தனர்.

ஏஐடி​யுசி கண்​டனம்:

இந்​நிலை​யில், காத்​திருப்பு போராட்​டத்​தில் ஈடு​பட்ட தொழிலா​ளர்​களை கைது செய்​திருப்​ப​தற்கு தமிழ்​நாடு ஏஐடி​யுசி கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக அதன் பொதுச்​செய​லா​ளர் ம.ரா​தாகிருஷ்ணன் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், “போ​ராட்​டத்​தில் ஈடு​பட்ட தொழிலா​ளர்​களை​யும், இதில் பங்​கேற்க பல்​வேறு மாவட்​டங்​களி​லிருந்து வந்த தொழிலா​ளர்​களை வரும் வழி​யிலும் காவல் துறை​யினர் கைது செய்​திருப்​பது கண்​டனத்​துக்​குரியது.

இது ஜனநாயக உரிமை​யைப் பறிக்​கும் செயல். அரசால் ஏற்​கப்​பட்ட கோரிக்​கைகளை கூட நிறைவேற்​றாமல் இருப்​பது நியாய​மானது அல்ல. தொழிலா​ளர்​களின் கோரிக்​கைகளை உடனடி​யாக நிறைவேற்ற அரசு முன்வர வேண்​டும்” என்று குறிப்​பிட்​டுள்​ளார்.

SCROLL FOR NEXT