தமிழகம்

அக்.25, நவ.1-ம் தேதிகளில் தமிழகத்தில் 128 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி

சென்னையில் 7 இடங்களில் நடைபெறுகிறது

செய்திப்பிரிவு

சென்னை: ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நிறுவன நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேரணி நடத்த திட்டமிடப்பட்டது.

ஆனால், அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாநிலச் செயலாளர் ஜெகதீசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், பேரணி நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அனுமதியைத் தொடர்ந்து, அக்.25, நவ.1 ஆகிய 2 ஞாயிற்றுக்கிழமைக ளில், தமிழகம் முழுவதும் 128 இடங்களில் பேரணிகள் நடைபெறுகின்றன.

சென்னையில் மட்டும் கொரட்டூர், பெரம்பூர், குரோம் பேட்டை உள்பட 7 இடங்களில் அக்.25-ம் தேதி பேரணி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன.

கொளத்தூரில் நடைபெறும் பேரணியில், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான ஆர்எஸ்எஸ் பொறுப்பாளர் பி.எம்.ரவிக்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

இதேபோல், மாநிலம் முழுவதும் நடைபெறும் பேரணிகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

தற்போது இதற்கான பாதுகாப்பு, வழித்தடம், ஒருங்கிணைப்பு பணிகளை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT