காஞ்சிபுரம் ஓரிக்கை மணி மண்டபத்தில் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி  ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்த ஆர்.எஸ்.எஸ். தேசியத் தலைவர் மோகன் பகவத்.

 
தமிழகம்

ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சந்திப்பு

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: ராஷ்டிரிய சுயம்​சேவக் சங்​கத்​தின் (ஆர்.​எஸ்.​எஸ்.) தேசிய தலை​வர் மோகன் பகவத், காஞ்​சிபுரம் அருகே உள்ள ஓரிக்கை மணி மண்​டபத்​துக்கு நேற்று வருகை தந்​தார். அப்​போது அவர் சங்கர மடத்​தின் மடா​திப​தி​களை சந்​தித்​தார்.

ஓரிக்கை மணி மண்​டபத்​தில் காஞ்சி சங்கர மடத்​தின் மடா​திப​தி​கள் தற்​போது சாதுர்​மாஸ்ய விரதம் மேற்​கொண்டு வரு​கின்​றனர். இந்த ஆன்​மிக நிகழ்​வின் ஒரு பகு​தி​யாக பக்​தர்​கள் அவ்​வப்​போது சந்​தித்து ஆசி பெறுகின்​றனர். இந்​நிலை​யில் ஆர்​.எஸ்.​எஸ். தலை​வர் மோகன் பகவத் காஞ்​சிபுரம் வந்​தார். ஓரிக்கை மணி மண்​டபம் வந்த அவர் காஞ்​சிபுரம் சங்கர மடத்​தின் மடா​திபதி  விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகள், இளைய மடா​திபதி ஸ்ரீ சத்ய சந்​திரசேகரேந்​திர சரஸ்​வதி சுவாமிகள் ஆகியோரை சந்​தித்​தார்.

பின்​னர் விஜயேந்​திர சரஸ்​வதி சுவாமிகளு​டன் நாட்​டின் தற்​போதைய நிலைமை குறித்​தும், ஆன்​மிக வளர்ச்சி மற்​றும் சமூக நலம் சார்ந்து மேற்​கொள்​ளப்பட வேண்​டிய பணி​கள் குறித்​தும் விரி​வாக ஆலோ​சித்​த​தாகத் தெரி​கிறது. இந்​நிகழ்ச்​சி​யின் போது காஞ்சி சங்கர மடத்​தின் முக்​கிய நிர்​வாகி​களும், தொண்​டர்​களும்​ உடனிருந்​தனர்​.

SCROLL FOR NEXT