தமிழகம்

ரூ.40 ஆயிரம் லஞ்சம்: பில் கலெக்டர் கைது

செய்திப்பிரிவு

கோவை: கோவை​யில் காலி இடத்​துக்கு வரி விதிக்க ரூ.40 ஆயிரம் லஞ்​சம் வாங்​கிய​தாக மாநக​ராட்சி வரி வசூலரை லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர்.

கோவையைச் சேர்ந்த பிர​காஷ், சுந்​த​ராபுரத்​தில் மினி திரையரங்கு கட்ட 39 சென்ட் காலி நிலத்தை வாடகைக்​காக பெற்​றார். அதில் கட்​டிடம் கட்​டு​வதற்கு முன்​பாக, காலி மனை இட வரி செலுத்​து​வதற்​காக சுந்​த​ராபுரத்​தில் உள்ள வரிவசூல் மையத்​தில் வரி வசூல​ராக பணி​யாற்​றிவரும் யமுனா தேவியை அணுகி​னார். அவர் ரூ.40 ஆயிரம் லஞ்​சம் கேட்​டுள்ளார்.

லஞ்​சம் கொடுக்க விரும்​பாத பிர​காஷ் இதுகுறித்து கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீ​ஸாரிடம் புகார் அளித்​தார். அவர்கள் ஆலோசனைபேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்​டு​களை யமுனா தேவி​யிடம் கொடுத்​த​போது அங்கு மறைந்​திருந்த கூடு​தல் எஸ்​பி ராஜேஷ் தலை​மையி​லான லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் கையும் களவு​மாக யமு​னாதே​வியை பிடித்து கைது செய்​தனர்.

SCROLL FOR NEXT