தமிழகம்

வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்: 30,000 பேருக்கு 5 ஆடுகள் வழங்கும் திட்டத்துக்கு ரூ.110 கோடி ஒதுக்கீடு

செய்திப்பிரிவு

சென்னை: ஊரகப் பகுதி​களில் வாழும் 30 ஆயிரம் தகுதி வாய்ந்த மகளிருக்கு வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்​டத்​தின் கீழ் 100 சதவீதம் மானியத்​தில் 5 ஆடுகள் வழங்​கும் திட்​டத்​துக்கு ரூ.109.75 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழக அரசின் 2026– 27-ம் ஆண்டு நிதி​நிலை அறிக்​கை​யில், கிராமப்​புற மேம்​பாடு, ஊட்​டச்​சத்து பாது​காப்பு மற்​றும் பொருளாதார வளர்ச்சி ஆகிய​வற்றை ஊக்​கு​விக்​கும் வேளாண் பொருளாதா​ரத்​தின் ஒரு முக்​கிய அங்​க​மாக கால்​நடை பராமரிப்​புத் துறை விளங்​கு​கிறது.

நடப்பு நிதி​யாண்​டில், ஊரகப் பகுதி​களில் வாழும் நலிவடைந்த கைம்​பெண்​கள், ஆதரவற்ற பெண்​கள், திருநர்​கள் மற்​றும் மாற்​றுத்​ திறனாளி​களுக்கு வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்​டத்​தின் கீழ் 100 சதவீதம் மானியத்​தில் 5 வெள்​ளாடுகள் அல்​லது செம்​மறி ஆடுகள் வழங்​கப்​படும். இதன்​மூலம், சுமார் 30 ஆயிரம் தகுதி உள்ள நபர்​கள் பயனடைவார்​கள் என்று நிதித்துறை அமைச்​சர் மரிய வில்​சன் அறி​வித்​தார்.

அந்த அறி​விப்பை செயல்​படுத்​தும் வகை​யில், 2026– 27-ம் நிதி ஆண்​டுக்கு ரூ.109.75 கோடிக்​கான நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. இத்​திட்​டத்​தின் மூலம், ஊரகப் பகுதி​களில் வாழும் நலிவடைந்த கைம்​பெண்​கள், ஆதரவற்ற பெண்​கள், திருநர்​கள் மற்​றும் மாற்​றுத்​திறனாளி​கள் ஆகியோ​ருக்கு கால்​நடை சொத்​துகள் வழங்​கப்​படுவ​தால் அவர்​களின் பொருளாதா​ரம் மேம்​பாடு அடைவதோடு, கிராமப்​புற பொருளாதா​ர​மும் சிறக்​கும் என்று தமிழக அரசு தெரி​வித்​துள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT