தமிழகம்

தையூரில் கண்டெடுத்த ராக்கெட் குண்டு செயலிழப்பு: 12 நாட்கள் பதற்றத்துக்கு முடிவு கட்டிய ராணுவம்

செய்திப்பிரிவு

தையூர்: கேளம்​பாக்​கம் அருகே தையூர் கிராமத்​தில் கடந்த 12 நாட்​களாக பரபரப்பை ஏற்​படுத்​திய வெடிக்​காத ராக்கெட் குண்டை ராணுவத்​தின் தொழில்​நுட்ப நிபுணர்​கள் பாது​காப்​பாக செயலிழக்​கச் செய்​தனர். இதையடுத்து அப்​பகுதி மக்​கள் பெரும் நிம்​மதி அடைந்​துள்​ளனர்.

கேளம்​பாக்​கம் அருகே தையூர் வி.ஐ.பி. நகர் வீட்டு மனைப்​பிரி​வில் உள்ள வற்​றிய கிணற்​றில் கடந்​த 17-ம் தேதி விளை​யாடிக் கொண்​டிருந்த சிறு​வர்​கள், வெடிக்​காத நிலை​யில் இருந்த ராக்​கெட் லாஞ்​சரை கண்​டு​பிடித்​தனர்.

தகவலறிந்த கேளம்​பாக்​கம் போலீ​ஸார் உடனடி​யாக சம்பவ இடத்​துக்கு சென்று ராக்​கெட் குண்டை மீட்டு பாது​காப்​பான இடத்​தில் வைத்​து, தடுப்​பு​கள் அமைத்து 24 மணி நேர போலீஸ் பாது​காப்பு ஏற்​பாடு செய்​தனர்.

தொடர்ந்து பரங்​கிமலை​யில் உள்ள ராணுவ தலை​மையகத்​துக்கு தகவல் அனுப்​பப்​பட்ட நிலை​யில், நிர்​வாக நடை​முறை​கள் காரண​மாக ஆட்​சி​யர் மூலம் மீண்​டும் உரிய தகவல் அனுப்​பப்​பட்​டது.

இதற்​கிடையே, தமிழ்​நாடு போலீஸ் வெடிகுண்டு செயலிழப்பு கமாண்டோ பிரி​வினர் பாது​காப்பு நடவடிக்​கை​யாக குழி தோண்டி ராக்​கெட் குண்டை பாது​காப்​பாக வைத்​திருந்​தனர்.

இந்​நிலை​யில், பரங்​கிமலை ராணுவ தொழில்​நுட்ப பிரிவைச் சேர்ந்த 6 பேர் கொண்ட குழு தையூருக்கு வந்​து, கேளம்​பாக்​கம் போலீ​ஸாரின் உதவி​யுடன் காலி விளைநிலத்​துக்கு ராக்​கெட் குண்டை எடுத்​துச் சென்று பாது​காப்​பான முறை​யில் செயலிழக்​கச் செய்​தது.

இதன் மூலம் கடந்த 12 நாட்​களாக அச்​சத்​தி​லும் பதற்​றத்​தி​லும் இருந்த தையூர் கிராம மக்​களின் கவலைக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கப்​பட்​டு, அப்​பகு​தி​யில் இயல்பு நிலை திரும்​பி​யுள்​ளது.

SCROLL FOR NEXT