சென்னை: தமிழகத்தில் ரூ.507 கோடியில் நீர்நிலைகள் சீரமைப்பு இன்று தொடங்கவுள்ளது.
இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வரின் உத்தரவின்படி வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 10,185 வரத்துக் கால்வாய்கள், 809 ஏரிகள் - குளங்கள் மற்றும் ஊரணிகள் புனரமைக்கும் பணிகள் ரூ.507 கோடி மதிப்பீட்டில் திங்கட்கிழமை (இன்று) தொடங்க உள்ளன. இந்தப் பணியில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும்.