தமிழக அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்ட அறிக்கையை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று சமர்ப்பித்தார் குழுத் தலைவர் ககன்தீப்சிங் பேடி. உடன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், நிதித் துறைச் செயலர் த.உதயசந்திரன், குழு உறுப்பினர் கே.ஆர்.சண்முகம் உள்ளிட்டோர்.

 
தமிழகம்

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்ட அறிக்கை தாக்கல்

முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார் ஆய்வுக் குழு தலைவர் ககன்தீப்சிங் பேடி

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசு ஓய்​வூ​தி​யர்​களுக்​கான திட்ட அறிக்​கையை முதல்​வர் மு.க.ஸ்​டா​லினிடம் ஆய்​வுக் குழுத் தலை​வர் ககன்​தீப்​சிங் பேடி நேற்று சமர்ப்​பித்​தார். 2003 ஏப். 1 முதல் தமிழக அரசுப் பணி​யில் சேர்ந்​தவர்​களுக்கு பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டம் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது.

பங்​களிப்​புத் தொகை எல்​ஐசி நிறு​வனத்​தில் முதலீடு செய்​யப்​பட்​டுள்​ளது. ஆனால், பங்​களிப்பு ஓய்​யூ​தி​யத் திட்​டத்தை ரத்து செய்​து, பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்​படுத்​தக் கோரி அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள் தொடர்ந்து போராட்​டம் நடத்தி வரு​கின்​றனர்.

2021 தேர்​தலின்​போது திமுக வெளி​யிட்ட தேர்​தல் அறிக்​கை​யிலும் இது தொடர்​பாக வாக்​குறுதி அளிக்​கப்​பட்​டதை, பல்​வேறு தரப்​பினரும் சுட்​டிக்​காட்​டி வந்​தனர். இதற்​கிடை​யில், மத்​திய அரசு புதிய ஒருங்​கிணைந்த ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அறி​வித்​தது.

இதையடுத்​து, பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம், பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத் திட்​டம், ஒருங்​கிணைந்த ஓய்​வூ​தி​யத் திட்​டம் ஆகிவற்றை ஆய்வு செய்​து, அரசுக்கு அறிக்கை சமர்ப்​பிக்க ஊரக வளர்ச்​சித் துறைச் செயலர் ககன்​ தீப்​சிங் பேடி தலை​மை​யில் குழு அமைக்​கப்​பட்​டு, 9 மாதங்​களில் அறிக்கை தாக்​கல் செய்​யு​மாறு அறி​வுறுத்​தப்​பட்​டது.

இந்​தக் குழு அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​களின் கருத்​துகளை கேட்​டறிந்​து, கடந்த அக்​டோபர் மாதம் இடைக்​கால அறிக்கையை சமர்ப்​பித்​தது.

ஆனால், அரசு ஊழியர் சங்​கங்​கள் போராட்​டக் களத்​தில் குதித்​த​தால், அவர்​களு​டன் அமைச்​சர்​கள் பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.

எனினும், உடன்​பாடு எட்​டப்​பட​வில்​லை. இந்​நிலை​யில், ஓய்​வூ​தி​யத் திட்​டங்​கள் குறித்த அறிக்​கையை குழுத் தலை​வர் ககன்​தீப்சிங் பேடி, முதல்​வர் மு.க.ஸ்​டா​லினிடம் நேற்று சமர்ப்​பித்​தார்.

இக்​குழு​வின் பரிந்​துரைகளை ஆய்​வுசெய்​து, விரை​வில் தமிழக அரசின் ஓய்​வூ​தி​யத் திட்​டம் தொடர்​பான அறி​விப்பை முதல்​வர் வெளி​யிடு​வார் என் எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

SCROLL FOR NEXT