சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு ஏன்?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு ஏன்?
Updated on
1 min read

சென்னை: சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,360 குறைந்​தது. அதே​போல, வெள்​ளி​யும் கிலோவுக்கு ரூ.23 ஆயிரம் குறைந்​தது. சர்​வ​தேசப் பொருளா​தா​ரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில் தங்கம் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது.

கடந்த டிச. 15-ல் ஒரு பவுன் தங்கம் ரூ.1 லட்​சத்தை தாண்​டி, வரலாறு காணாத புதிய உச்​சத்தை பதிவு செய்​தது. பின்​னர் விலை ஏற்ற இறக்​க​மாக இருந்த நிலை​யில் டிச. 27-ம் தேதி ரூ.1 லட்​சத்து 4 ஆயிரத்து 800-ஆக உயர்ந்​து, மீண்​டும் புதிய உச்​சத்தை தொட்​டது.

இது​போல, வெள்​ளி​யும் கிலோவுக்கு ரூ.2.85 லட்​ச​மாக அதி​கரித்து புதிய உச்​சத்தை பதிவு செய்​தது. நேற்று முன்​தினம் தங்கம், வெள்ளி விலை சற்று குறைந்​தது. இந்​நிலை​யில், ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,360 குறைந்​து, ரூ.1 லட்​சத்து 800-க்கு விற்​கப்​பட்​டது.

ஒரு கிரா​முக்கு ரூ.420 குறைந்​து, ரூ.12,600-க்கு விற்​பனை​யானது. அதே​போல, 24 காரட் சுத்த தங்கம் ரூ.1 லட்​சத்து 9 ஆயிரத்து 960-க்கு விற்​கப்​பட்​டது. மேலும், வெள்ளி விலை​யும் அதிரடி​யாக குறைந்​தது. கிரா​முக்கு ரூ.23 குறைந்து ரூ.258-க்​கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.23 ஆயிரம் குறைந்து ரூ.2 லட்​சத்து 58 ஆயிரத்​துக்​கும் நேற்று விற்​பனை​யானது.

தங்கம், வெள்ளி விலை குறைந்​த​தால், பண்​டிகை மற்​றும் குடும்ப நிகழ்ச்​சிக்​காக நகை வாங்​கக் கரு​தி​யிருந்​தவர்​கள் மகிழ்ச்சி அடைந்​தனர். சென்னை தங்கம் மற்​றும் வைர நகை வியா​பாரி​கள் சங்​கப் பொதுச் செய​லா​ளர் எஸ்​.​ சாந்​தக்​கு​மார் கூறும்​போது, “கடந்த வாரம் கிறிஸ்​து​மஸ் பண்​டிகை காரண​மாக சர்​வ​தேச அளவில் வங்​கி​களுக்கு விடு​முறை விடப்​பட்​டிருந்​தது.

இதையொட்டி, முதலீட்​டாளர்​கள் தங்​கத்தை வாங்​கிக் குவித்​தால், விலை உயர்ந்​தது. ஆனால், குறுகிய​கால லாபத்​தைக் கருதி முதலீட்​டாளர்​கள் தங்​கத்தை விற்​ற​தால், விலை குறைந்​துள்​ளது. வெள்ளி விலை குறைவுக்​கும் இதுவே காரணம். வரும் நாட்​களில் விலை ஏற்ற இறக்​க​மாக இருக்​கும். பண்​டிகை காலத்​தில் தங்கம் விலை உயர வாய்ப்பு உள்​ளது” என்​றார்.

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு ஏன்?
போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்கள் 700 பேர் கைது - சென்னை அண்ணா அறிவாலயம், கருணாநிதி நினைவிடம் முற்றுகை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in