தமிழகம்

அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தில் பூங்கா உட்பட 9 ரயில் நிலையங்கள் சீரமைப்பு: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

செய்திப்பிரிவு

சென்னை: அம்ரித் பாரத் நிலையம் திட்​டத்​தின் கீழ், சென்னை பூங்​கா, சின்​ன​சேலம் உட்பட 9 ரயில் நிலை​யங்​களை மேம்​படுத்​தும் பணி இறுதி கட்​டத்​தில் உள்​ளன. இவற்றை பிரதமர் மோடி விரை​வில் நாட்​டுக்கு அர்ப்​பணிக்க உள்​ளார்.

அம்​ரித் பாரத் திட்​டத்​தின் கீழ், நாடு முழு​வதும் 1,300-க்​கும் மேற்​பட்ட ரயில் நிலை​யங்​களை மேம்​படுத்​தும் பணியை மத்​திய அரசு முன்​னெடுத்​துள்​ளது. தெற்கு ரயில்​வே​யில் 40-க்​கும் மேற்​பட்ட ரயில் நிலை​யங்​களில் மேம்​பாட்​டுப் பணி​கள் நடை​பெறுகின்​றன.

நாடு முழு​வதும் மேம்​படுத்​தப்​பட்ட 119-க்​கும் மேற்​பட்ட ரயில் நிலை​யங்​கள் மக்​கள் பயன்​பாட்​டுக்கு திறக்​கப்​பட்​டுள்​ளன. தெற்கு ரயில்​வே​யிலும் 21 ரயில் நிலை​யங்​களில் மேம்​பாட்டு பணி​கள் முடிக்கப்பட்டு, நாட்​டுக்கு அர்ப்​பணிக்​கப்​பட்​டன.

மீத​முள்ள 1,150-க்​கும் மேற்​பட்ட ரயில் நிலை​யங்​களில் முதல் ​கட்ட மற்​றும் 2-ம் கட்​டப் பணி​கள் பல்​வேறு நிலைகளில் மிக வேக​மாக நடை​பெறுகின்றன இந்​நிலை​யில், சென்னை பூங்​கா, சின்​ன​சேலம், குன்​னூர் உட்பட 8 ரயில் நிலை​யங்​களில் மேம்​பாட்டு பணி​கள் இறுதி கட்​டத்​தில் உள்​ளன. இவற்றை பிரதமர் மோடி விரை​வில் நாட்​டுக்கு அர்ப்​பணிக்க உள்​ளார்.

இதுகுறித்​து, தெற்கு ரயில்வே அதி​காரி​கள் கூறிய​தாவது: ரயில் நிலை​யங்​களில் பயணி​களுக்​கான அனைத்து அடிப்​படை வசதி​களை​யும் மேம்​படுத்​தும் வகை​யில், அம்​ரித் பாரத் ரயில் நிலைய திட்​டம் செயல்​படுத்​தப்​படு​கிறது.

மின்​தூக்​கி, நடை மேம்​பாலம், கூடு​தல் நடைமேடைகள், பயணி​கள் காத்​திருப்பு அறை​கள், நுழைவு வாயில்​கள் சீரமைப்​பு, நகரும் படிக்​கட்​டு​கள், மல்டி லெவல் பார்க்​கிங், சிசிடிவி கேமிரா உள்​ளிட்ட வசதி​கள் இதில் இடம்​பெறும்.

அம்​ரித் பாரத் நிலை​யம் திட்​டத்​தின் கீழ், தமிழகத்​தில் சென்னை பூங்​கா, குன்​னூர், சின்​ன​சேலம் ஆகிய நிலை​யங்​களிலும், கேரளா​வில் தலசேரி, திரூர், பரப்​பனங்​காடி, அங்​க​மாலி, சாலக்​குடி, நிலம்​பூர் ஆகிய ரயில் நிலை​யங்​களிலும் மேம்​பாட்​டுப் பணி​கள் இறுதி நிலை​யில் உள்​ளன.

இவற்​றில், சென்னை பூங்கா ரூ.10.68 கோடி மதிப்​பிலும், குன்​னூர் ரயில் நிலை​யம் ரூ.7.62 கோடி மதிப்​பிலும், சின்​ன​சேலம் ரயில் நிலை​யம் ரூ.2.5 கோடி மதிப்​பிலும் மேம்​படுத்​தப்​படு​கின்​றன.

இந்த நிலை​யங்​களை பிரதமர் மோடி வரும் 12 முதல் 17-ம் தேதிக்​குள் நாட்​டுக்கு அர்ப்​பணிப்​பார் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இருப்​பினும், தேதி தற்​போது வரை உறுதி செய்​யப்​பட​வில்​லை. இவ்​வாறு அவர்​கள்​ தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT