காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பறிமுதல் பைக்கை திருடிய உதவி ஆய்வாளர்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

தாழம்பூர்: ​காவல் நிலை​யத்​தில் பாது​காப்​பாக வைக்​கப்​பட்​டிருந்த பறி​முதல் செய்​யப்​பட்ட இருசக்கர வாக​னத்​தை, அதே காவல் நிலை​யத்​தில் பணி​யாற்​றிய உதவி ஆய்​வாளர் (எஸ்​.ஐ.) திருடிச் சென்​ற​தாக வெளி​யாகி​யுள்ள சம்​பவம் காவல்​துறை​யிலும், பொது​மக்​களிடை​யிலும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

சென்னை ஓ.எம்​.ஆர். சாலை​யில் உள்ள தாழம்​பூர் காவல் நிலை​யத்​தில் திருட்டு வழக்​கில் மீட்​கப்​பட்ட இருசக்கர வாக​னம் காவல் நிலைய வளாகத்​தில் நிறுத்தி வைக்​கப்​பட்​டிருந்​தது. சில நாட்​களுக்கு பிறகு, வாக​னத்தை பெற்​றுக்​கொள்ள வந்த உரிமை​யாளர் காவல் நிலை​யத்தில், பைக் மாய​மாகி இருந்​தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து காவல் நிலை​யத்​தில் பொருத்​தப்​பட்​டிருந்த சிசிடிவி பதிவு​களை ஆய்வு செய்​தபோது, கடந்த ஜனவரி 30-ம் தேதி இரவு, உதவி ஆய்​வாளர் ராஜசேகர் காவல் நிலை​யத்​தில் இருந்து அந்த பைக்கை எடுத்​துச் செல்​லும் காட்​சிகள் பதி​வாகி இருந்​தது.

இதையடுத்​து, தற்​போது செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் வசித்து வந்த ராஜசேகரின் வீட்​டில் போலீ​ஸார் திடீர் சோதனை நடத்​தினர். அப்​போது, காணா​மல் போன பைக் அவரது வீட்​டில் இருந்​தது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது.

அது​மட்​டுமின்​றி, வேறு ஒரு காவல் நிலை​யத்​தில் பதிவு செய்​யப்​பட்ட வழக்​கில் பறி​முதல் செய்​யப்​பட்ட மற்​றொரு இருசக்கர வாக​ன​மும் அவரது வீட்​டில் இருந்து கைப்​பற்​றப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.

விசா​ரணை​யில், ராஜசேகர் பணிக்கு முறை​யாக வராதது, இரவு நேரங்​களில் சக பெண் காவலரிடம் அத்​து​மீறி பேசி​யது உள்​ளிட்ட பல்​வேறு புகார்​களில் சிக்​கி, துறை ரீதி​யான நடவடிக்​கைக்கு பரிந்​துரைக்​கப்​பட்​டிருந்​தது தெரிய​வந்​துள்​ளது.

காவல் நிலை​யத்​தில் பாது​காப்​பாக இருந்த பறி​முதல் வாக​னத்​தை உதவி ஆய்வாளர் திருடிச் சென்​ற​து காவல்​துறை​யின் உள்​கட்​டமைப்பு பாது​காப்பு, கண்​காணிப்பு முறை​கள் குறித்து பல்​வேறு கேள்வி​களை எழுப்​பி​யுள்​ளது. இந்த விவ​காரம் தொடர்​பாக உயர் அதி​காரி​கள்​ தொடர்ந்​து வி​சா​ரணை மேற்​கொண்​டு வருகின்​றனர்​.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
சென்னை | வீட்டில் இருந்த 129 பவுன் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம்பெண்: காதலன் உட்பட 5 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in