தமிழகம்

மீன்பிடி குறைவுகால நிவாரணம் ரூ.7 ஆயிரமாக உயர்வு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்​நாட்​டில் மீனவர்​களுக்​கான மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகை ரூ.7 ஆயிர​மாக உயர்த்​தப்​பட்டு நடப்​பாண்டு முதல் வழங்​கப்​படும் என்று மீன்​வளம் மற்​றும் மீனவர் நலத் துறை அமைச்​சர் நாத் தெரி​வித்​துள்​ளார்.

சென்னை நந்​தனத்​தில் உள்ள மீன்​வளம் மற்​றும் மீனவர் நலத் துறை இயக்​குநர் அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்ற அரசு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழா​வில், அமைச்​சர் நாத் பயனாளி​களுக்கு நிதி​யுத​வி​களை வழங்​கினார்.

தொடர்ந்து கடலில் மீன்​பி​டிக்​கும் போது காணா​மல் போன சென்னை மாவட்​டத்​தைச் சேர்ந்த 2 மீனவர்​களின் குடும்​பங்​களுக்கு, அவசர நிவாரண​மாகச் சுழல் நிதி​யில் இருந்து ரூ.2 லட்​சத்​துக்​கான விடுவிப்பு ஆணைகளை​யும் அமைச்​சர் வழங்​கினார்.

கடந்த சட்​டமன்ற கூட்​டத்​ தொடரில் முதல்​வர் உத்​தர​வின்​படி இந்​தாண்டு முதல் நிவாரணத் தொகை உயர்த்​தப்​பட்​டுள்​ளது. இதன் மூலம் தமிழ்​நாட்​டின் 14 கடலோர மாவட்​டங்​களைச் சேர்ந்த 1.98 லட்​சம் மீனவ குடும்​பங்​கள் பயனடைவர்.

இதற்​காக மொத்​தம் ரூ.138.75 கோடி நிதி கடலோர மாவட்ட மீனவர்​களுக்கு மீன்​பிடி குறைவு​கால நிவாரணத் தொகை​யாக வழங்​கப்​படும். மேலும், கடல் மீனவர் மற்​றும் மீனவ மகளிர் சேமிப்​புத் திட்​டத்​தின் கீழ், பயனாளி​கள் செலுத்​தும் பங்​குத் தொகை​யான ரூ.1,500-க்கு இணை​யாக, அரசு தனது பங்​காக இரு​மடங்கு (ரூ.3 ஆயிரம்) சேர்த்து, மீன்​பிடி குறைவு காலங்​களில் மொத்​தம் ரூ.4,500 வழங்கி வரு​கிறது.

நடப்​பாண்​டில் 2.08 லட்​சம் கடல் மீனவர்​களுக்​காக அரசின் பங்​குத் தொகை​யாக ரூ.62.53 கோடியும், 2.02 லட்​சம் மீனவ மகளிருக்​காக ரூ.60.71 கோடியும் அரசால் ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டுள்​ளது.

மீனவர்​கள் தங்​களது மீன்​களைச் சுகாதா​ர​மான முறை​யில் சந்​தைப்​படுத்தி அதிக வரு​வாய் ஈட்​டும் வகை​யில், ரூ.75 ஆயிரம் மதிப்​புள்ள குளிர்​காப்பு பெட்​டிகளு​டன் கூடிய 35 இருசக்​கர வாக​னங்​கள் மீனவர்​களுக்கு வழங்​கப்​பட்​டது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT