தமிழகம்

நேபாளம் சென்ற 49 பேர் குறித்து தகவல் இல்லை: குடும்ப வாழ்வாதாரம் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

குரோம்பேட்டையில் உறவினர்கள் கண்ணீர்

செய்திப்பிரிவு

குரோம்பேட்டை: கைலாஷ் யாத்​திரைக்​காக குரோம்​பேட்​டையி​லிருந்து நேபாளம் சென்ற 49 பேர் குறித்து இது​வரை தெளி​வான தகவல் கிடைக்​க​வில்லை எனவும், இதனால் அவர்​களது குடும்​பங்​களின் வாழ்​வா​தா​ரம் பாதிக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும் உறவினர்​கள் தெரி​வித்​தனர்.

பாதிக்​கப்​பட்ட உறவினர்​கள் 50-க்​கும் மேற்​பட்​ட​வர்​கள் குரோம்​பேட்​டை​யில் உள்ள சம்​பந்​தப்​பட்ட டிராவல்ஸ் நிறு​வனத்​தில் நேற்று பத்​திரி​கை​யாளர்​களை சந்​தித்​தனர்.

அப்​போது அவர்​கள் கூறிய​தாவது: கைலாஷ் யாத்​திரைக்​காக ஆக.14-ம் தேதி நேபாளம் சென்ற எங்​கள் உறவினர்​களில் சிலருடன் ஆக.26-ம் தேதி வரை மட்​டுமே தொடர்பு இருந்​தது. அதன்​பிறகு அவர்​களிடம் இருந்து எந்த தகவலும் இல்​லை.

சீனா-நே​பாள எல்​லை​யில் உள்ள குடி​யுரிமை சோதனை மையம் அருகே ஏற்​பட்ட திடீர் வெள்​ளத்​தில் அவர்​கள் சிக்​கிய​தாக தகவல் கிடைத்​தது. 35 முதல் 40 நாட்​களுக்​கும் மேலாகி​யும் தகவல் கிடைக்​காத​தால் குடும்​பத்​தினர் மிகுந்த மனவேதனை​யில் உள்​ளனர்.

தமிழக அரசு சார்​பில் தகவல்​களை ஒருங்​கிணைக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​ட​தாக தெரிவிக்​கப்​பட்​டாலும், 49 குடும்​பங்​களுக்​கும் தற்​போதைய நிலை மற்​றும் அரசு மேற்​கொண்​டுள்ள நடவடிக்​கைகள் குறித்து தெளி​வாகத் தெரிவிக்க வேண்​டும்.

காணா​மல் போனவர்​களின் வங்​கிக் கணக்​கு​களில் பணம் இருந்​த​போ​தி​லும், அவர்​களது செல்​போன் எண்​ணுடன் வங்​கிக் கணக்கு மற்​றும் ஏடிஎம் சேவை​கள் இணைக்​கப்​பட்​டுள்​ள​தால் பணத்தை எடுக்க முடிய​வில்​லை.

சில குடும்​பங்​களில் கணவர் மட்​டுமே வரு​மானம் ஈட்​டி வந்த நிலை​யில், தற்​போது குழந்​தைகளின் கல்விக் கட்​ட​ணம், வீட்டு செலவு உள்​ளிட்ட அன்​றாட தேவை​களை சமாளிக்க முடி​யாத நிலை ஏற்​பட்​டுள்​ளது.

எனவே 49 பேரின் நிலை குறித்து உடனடி​யாக அதி​காரப்​பூர்வ தகவலை குடும்​பத்​தினருக்கு தெரிவிக்க வேண்​டும். அவர்​களை கண்​டறி​யும் நடவடிக்​கையை விரைவுபடுத்​து​வதுடன், குடும்​பங்​களின் வாழ்​வா​தா​ரத்தை கருத்​தில் கொண்டு அரசு அவசர உதவி வழங்க வேண்​டும்.

வங்​கி​யில் உள்ள பணத்தை சட்​டப்​படி குடும்​பத்​தினர் பயன்​படுத்​து​வதற்​கான நடை​முறை​களை​யும் அரசு ஏற்​படுத்​தித்​ தர வேண்​டும்​. முதல்​வர்​ நேரடி​யாகத்​ தலை​யிட்​டு உரிய நடவடிக்​கை எடுக்​க வேண்​டும்​. இவ்​​வாறு அவர்​கள்​ தெரி​வித்​தனர்​.

SCROLL FOR NEXT