தமிழகம்

தமிழகம் முழுவதும் முடி மாற்று சிகிச்சை மையங்களுக்கு கட்டுப்பாடு

செய்திப்பிரிவு

சென்னை: தேசிய மருத்துவ ஆணை​யத்​தின் விதி​களை கடைப்​பிடித்​தால் மட்​டுமே முடி மாற்று சிகிச்சை மையங்​களுக்கு பதிவு உரிமம் வழங்​கப்​படும்என அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

தமிழக மருத்​துவ நிறு​வனங்​கள் முறைப்​படுத்​துதல் திருத்த சட்​டத்​தின்​படி, அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வ​மனை​கள் மட்டுமின்​றி, சித்​தா, ஆயுர்​வேதம், ஹோமியோப​தி, யுனானி மருத்துவமனை​களும் பதிவு செய்​வது கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது.

          

தமிழகம் முழு​வதும் செயல்​படும் முடிமாற்று சிகிச்சை மையங்​களை முறைப்​படுத்​து​வ​தி​லும், கண்​காணிப்​ப​தி​லும், பதிவு செய்வதில் சில சிக்​கல்​கள் இருப்​பது தெரிய​வந்​தது. அழகு நிலை​யங்கள், சரு​மப் பொலிவு மையங்கள் என்ற பெயரில் அவை செயல்​படு​வ​தால் சுகா​தா​ரத் துறை​யின் நேரடி கட்​டுப்​பாட்​டின்​கீழ் வராத​தால், அது​போன்ற மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ அதி​காரி​களால் முடிவ​தில்​லை.

இதையடுத்து புதிய நடை​முறை​களுடன் அரசாணை வெளியிடப்​பட்​டுள்​ளது. அதன்​படி, தேசிய மருத்​துவ ஆணை​யத்​தின் விதி​களை கடைப்​பிடித்​தால் மட்டுமே முடி மாற்று சிகிச்சை மையங்​களுக்கு பதிவு உரிமம் வழங்​கப்​படும்.

மருத்​து​வக் கவுன்​சிலில் பதிவு செய்த அங்கீரிக்​கப்​பட்ட மருத்​து​வர்​கள் மட்​டுமே சிகிச்சை மேற்​கொள்ளவேண்​டும். முன்​ன​தாக சிகிச்​சைக்கு உட்​படுத்​தப்​படும் நபரின் ஒப்புதலை அவசி​யம் பெறவேண்​டும். சுகா​தா​ரத்துறை​யால் கண்​காணிப்​புக்​கும், ஆய்வுக்​கும் உட்​படுத்​தப்​படும்.

அங்​கீகரிக்​கப்​பட்ட மருத்​துவ தகு​தி​கள் இல்​லாமல் விதிகளுக்கு புறம்​பாக சிகிச்​சைகள் வழங்​கு​வது கண்​டறியப்​பட்​டால் சம்​பந்​தப்​பட்ட நபர் மற்​றும் நிறு​வனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்​கும் வகை​யில் மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

SCROLL FOR NEXT