திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள மணிமண்டபத்தில் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து நேற்று மரியாதை செலுத்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். படம்: ர.செல்வமுத்துகுமார்

 
தமிழகம்

எந்த ஆட்சி குறித்தும் பேச விரும்பவில்லை; அரசியலில் இருந்து விலகி இருக்கிறேன்: ராம்நாத் கோவிந்த் கருத்து

செய்திப்பிரிவு

திருச்சி: எந்த ஆட்சி குறித்​தும் தற்​போது நான் பேச விரும்​ப​வில்​லை. அரசி​யலில் இருந்து விலகி இருக்​கிறேன் என முன்​னாள் குடியரசுத் தலை​வர் ராம்​நாத் கோவிந்த் தெரி​வித்​தார்.

குடியரசு முன்​னாள் தலை​வர் ராம்​நாத் கோவிந்த் 2 நாள் பயண​மாக தமிழகம் வந்​துள்​ளார். சுற்​றுப்​பயணத்​தின் ஒருபகு​தி​யாக திருச்சி வந்த அவர், மத்​தியபேருந்து நிலை​யம் அரு​கேயுள்ளபெரும்​பிடுகு முத்​தரையர் மணிமண்​டபத்​தில் மரி​யாதை செலுத்​தி​னார்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது: பல நூற்​றாண்​டு​களுக்கு முன்பு இப்​பகு​தி​யில் சிறப்​பான ஆட்சி வழங்​கிய பேரரசர் பெரும்​பிடுகு முத்​தரையர் சிலைக்கு மரி​யாதை செலுத்​தும் வாய்ப்பு கிடைத்​தது பாக்​கி​யம்.

நம் நாட்​டில் இருந்த பேரரசர்களை சாதி, மதம், மொழி போன்ற வேற்​றுமை​களால் தொடர்​புபடுத்​தக் கூடாது. அவர்​கள் அனை​வரும் நமது வழி​காட்​டிகள். இன்​றைய சந்​த​தி​யர் நன்​றாக இருப்​ப​தற்​கு, அவர்​கள் வகுத்​துத்​தந்த வழி​காட்​டல்​களே காரண​மாக உள்​ளன.

நான் 5 ஆண்​டு​கள் குடியரசுத் தலை​வ​ராக செயல்​பட்​டதற்​கும் அவர்​களின் ஆசீர்​வாதமே காரணம் என நம்​பு​கிறேன். வட இந்​தி​யர்​கள், தென்​னிந்​தி​யர்​கள் என பிரித்து பார்க்​கக் கூடாது. முன்​னாள் எம்​.பி. பொன்​.​ரா​தாகிருஷ்ணன் எனது நண்​பர். அவரைப் போன்று தமிழகத்​தில் எனக்கு நிறைய நண்​பர்​கள் உள்​ளனர்.

என்​னைப் பொருத்​தவரை நாம் அனை​வரும் இந்​தி​யர்​கள். எந்த ஆட்சி குறித்​தும் தற்​போது நான் பேச விரும்​ப​வில்​லை. அரசி​யலில் இருந்து நான் விலகி இருக்​கிறேன். இவ்​வாறு அவர் கூறி​னார்.

தொடர்ந்​து, அவர் ஸ்ரீரங்​கம் ரங்​க​நாதர் கோயி​லில் மனை​வி, மகளு​டன் தரிசனம் செய்​தார். அடுத்​த​தாக பஞ்​சபூத தலங்​களில் நீர்த் ​தல​மான திரு​வானைக்​காவல் அகிலாண்​டேஸ்​வரி, ஜம்​பு​கேஸ்​வரர் கோயி​லில் சுவாமி தரிசனம் செய்​தார்.

கோயில் நிர்​வாகம் சார்​பில் முன்​னாள் குடியரசுத் தலை​வர் மற்​றும் அவரது குடும்​பத்​தினர் தரிசனம் செய்ய ஏது​வாக பேட்​டரி கார் வசதி ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது. தொடர்ந்​து, மலைக்​கோட்டை மட்​டு​வார் குழலம்​மை, தாயு​மான சுவாமி கோயி​லிலும் சுவாமி தரிசனம்​ செய்​தார்​.

SCROLL FOR NEXT