கோப்புப்படம்
ராமேசுவரம்: ராமேசுவரத்தில் மீனவர்களின் ஆலோசனைக் கூட்டம் மீனவ பிரதிநிதி சேசு ராஜா தலைமையில் நேற்று நடந்தது.
இதில், கடந்த ஒருமாதத்தில் 3 விசைப்படகுகள் கைப்பற்றப்பட்டு 29 மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் மேலும் ஆறு மாதம், ஓராண்டு, 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று 30-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் உள்ளனர்.
இவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை வலியுறுத்தி ஆக.30 முதல் வேலை நிறுத்தம், செப்.1 முதல் தொடர் உண்ணாவிரதம் என தொடர் போராட்டம் அறிவித்துள்ளனர்.