பிரதமர் மோடியுடன் இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் குடும்பத்தினர்.
தேர்தல் களத்தின் பரபரப்புகளுக்கு இடையே, சென்னையில் நேற்று பிரபல இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உரையாடினர்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையே சென்னையில் ரமேஷ் விநாயகம் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இசையமைப்பாளர் ரமேஷ், இந்திய இசையைப் பிரபலப்படுத்த தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். தான் உருவாக்கி வரும் கமகா பாக்ஸ் இசைக்குறியீடு முறையின் சிறப்பம்சங்களை அவர் என்னுடன் பகிர்ந்து கொண்டார். இந்திய இசையை சர்வதேச நிலைக்குக் கொண்டு செல்ல இது ஒரு புதுமையான முயற்சியாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.