

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் 21 பேர் கொண்ட பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி உள்பட 6 மாநில முதல்வர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அதிமுக தலைமையிலான தே.ஜ. கூட்டணியில் 27 தொகுதிகளில் களம் காணும் பாஜக, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தற்போது பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில், கூட்டணியின் வெற்றிக்கு பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை உள்ளடக்கிய நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது.
அந்தப் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி, தேசியத் தலைவர் நிதின் நபின், மத்திய அமைச்சர்கள், அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், கிஷன் ரெட்டி, எல்.முருகன், சுரேஷ்கோபி, அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மோஹல் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும், மாநில முதல்வர்களான யோகி ஆதித்யாநாத் (உ.பி), மோகன் யாதவ் (ம.பி), தேவேந்திர பட்னாவிஸ் (மகாராஷ்டிரா), பஜன்லால் சர்மா (ராஜஸ்தான்), ஹிமந்த் பிஸ்வ சர்மா (அசாம்), ரேகா குப்தா (டெல்லி) ஆகியோரும் தமிழக தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்கப்படுகின்றனர். தமிழக மக்களின் நாடித் துடிப்பு அறிந்த உள்ளூர் தலைவர்களும், திரை நட்சத்திரங்களும் இந்தப் பட்டியலில் முக்கிய இடம் பிடித்துள்ளனர்.
அதன்படி, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், வி.பி.துரைசாமி, தேசியப் பொறுப்பாளர்களான அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, சி.டி.ரவி, தேஜஸ்வி சூர்யா, மற்றும் நடிகர் சரத்குமார், செந்தில், நடிகை குஷ்பு, நமீதா, கஸ்தூரி, ஒய்.ஜி.மதுவந்தி, புரட்சி கவிதாசன், சையது இப்ராஹிம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரன் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.