தமிழகம்

ஆட்டோ கட்டணத்தை தமிழக அரசு உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: பாமக நிறு​வனர் ராம​தாஸ் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​: தமிழகத்​தில் ஆட்டோக்களுக்கான கட்​ட​ணம் கடைசி​யாக 2013-ம் ஆண்டு நிர்​ண​யிக்​கப்​பட்​டது.

அப்​போது நிர்​ண​யிக்​கப்​பட்ட கட்​ட​ணப்​படி ஆரம்ப 1.8 கிலோமீட்​டருக்கு ரூ.25, அதன்​பின் ஒவ்​வொரு கிலோ மீட்​டருக்​கும் ரூ.12 என நிர்​ண​யிக்​கப்​பட்​டது. கடந்த 13 ஆண்​டு​களாக இந்த கட்​ட​ணத்​தில் எந்த மாற்​ற​மும் செய்​யப்​பட​வில்​லை.

ஆனால், இந்த காலக்​கட்​டத்​தில் பெட்​ரோல், டீசல் மற்​றும் சிஎன்ஜி எரிபொருட்​களின் விலை பல மடங்கு உயர்ந்​துள்​ளது. 2013-ம் ஆண்​டில் லிட்​டருக்கு ரூ.65 முதல் ரூ.70 வரை இருந்த பெட்​ரோல் விலை தற்​போது ரூ.100-ஐ தாண்டி உயர்ந்​துள்​ளது. அதே​போல் சிஎன்​ஜி. எரிபொருள் விலை​யும் குறிப்​பிடத்​தக்க அளவில் உயர்ந்​துள்​ளது.

ஆரம்ப கட்​ட​ணத்தை ரூ.40 ஆகவும், ஒவ்​வொரு கிலோ மீட்​டருக்​கும் ரூ.18 ஆகவும் நிர்​ண​யிப்​பது குறித்து அரசு பரிசீலிக்​கலாம்.

மேலும், ஒவ்​வொரு 3 ஆண்​டு​களுக்​குஒரு​முறை எரிபொருள் விலை உயர்​வின் அடிப்​படை​யில் கட்​ட​ணத்தை தானாக மறுஆய்வு செய்​யும் நடை​முறையை​ஏற்​படுத்த வேண்​டும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT