ராமதாஸ்
சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ராமதாஸ் தலைமையிலான பாமகவின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், திமுக, அதிமுக, நாதக, தவெக கட்சிகளிடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இதனிடையே, ராமதாஸ் தரப்பு பாமகவும், சசிகலா தொடங்கிய புதியக் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க உள்ளன. இதனையொட்டி, ராமதாஸ் பாமகவின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அன்புமணியின் பாமக என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல்:
அணைக்கட்டு தொகுதி - V.S.வெங்கடேஷ்
ஆற்காடு தொகுதி - P.N.J.அஜய்ராஜ் அவர்கள்
அரக்கோணம் தொகுதி - மா.வெற்றிவேல்
கீழ்வேளூர் தொகுதி - வேத.முகுந்தன்
சோளிங்கர் தொகுதி- மு.விஜயன் அவர்கள்
திட்டக்குடி தொகுதி - கருப்பன் மாணிக்கம்
ஆரணி தொகுதி - வீ.கலைமணி
கீழ்பெண்ணாத்தூர் தொகுதி - இரா.ஜானகிராமன்
ஓமலூர் தொகுதி - செ.சுரேஷ்குமார்