‘‘திமுக வேறு; பாஜக வேறு அல்ல’’ - திருச்சியில் விஜய் பிரச்சாரம்

‘‘திமுக வேறு; பாஜக வேறு அல்ல’’ - திருச்சியில் விஜய் பிரச்சாரம்
Updated on
1 min read

திருச்சி: ‘‘கரூர் நிகழ்ச்சி எப்படி ஒரு சூழ்ச்சியோ, அதேபோல், ஜனநாயகன் பட வெளியிட்டுக்கும் கூட்டு சதி நடைபெறுகிறது. திமுக வேறு, பாஜக வேறு அல்ல இரண்டுமே ஒன்றுதான்’’ என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

பெரம்பூர் தொகுதியை தொடர்ந்து திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட விஜய் இன்று விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் சென்றார். பின்னர் தொண்டர்கள் படை சூழ பிரச்சார வாகனத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியை சந்தித்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த விஜய், அருகில் இருந்த எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் பேசிய விஜய், ‘‘காஸ் பிரச்சினை எப்படி உள்ளது? காஸ் பிரச்சினையால் சிறிய அளவிலான டீ கடைகள் முதல் உணவகங்கள் வரை பாதிப்பை சந்தித்துள்ளன.

இப்படி ஒரு போர் மூலம் இப்படி ஒரு சூழல் ஏற்படும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை (ஈரான்-அமெரிக்க போர்). இவருக்கு ஒரு பிரச்சனை என்றால் விமானத்தில் டெல்லி சென்று வரும் முதல்வர், காஸ் தட்டுப்பாட்டை போக்க டெல்லி போய் வந்து இருக்கலாமே? இவர்கள் எப்போது சொன்னதை செய்துள்ளனர், அனைத்தும் வெற்று அறிக்கை மட்டுமே.

இவர்கள் 2021ம் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளையே முழுமையாக நிறைவேற்றவில்லை. காஸ் சிலிண்டருக்கு மானியம், கரும்புக்கு ஆதார விலை, ரேஷனில் சர்க்கரை, உளுந்து கூடுதலாக வழங்கல் இப்படி திமுகவின் பொய் வாக்குறுதிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். எவ்வளவு முறை சொல்வது, இருப்பதிலேயே மிக பெரிய பொய் வாக்குறுதி நீட் தேர்வு ரத்து.

இவர்கள் ஆட்சியில் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கூட இருப்பதில்லை. ஏன்.. ஒரு கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இயற்கை உபாதையை கழிக்காக வெளியே சென்ற பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்ட அவல நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.

இதே திருச்சியை சேர்ந்த அமைச்சர், அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.12,000 கோடி ஊழல் செய்துள்ளார். கரூர் நிகழ்ச்சி எப்படி ஒரு சூழ்ச்சியோ, அதேபோல், ஜனநாயகன் பட வெளியீட்டுக்கும் கூட்டு சதி நடைபெறுகிறது. திமுக வேறு, பாஜக வேறு அல்ல இரண்டுமே ஒன்றுதான்.

தொடர்ந்து தவெக தேர்தல் வாக்குறுதி குறித்து பட்டியலிட்ட விஜய், ஏப்ரல் 23ம் தேதி உங்களுக்கான தேர்தல், வசதியான வாழ்க்கையை உதரிவிட்டு உங்களுக்காக வந்துள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. அதோடு, திருச்சி மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றி பெறச் செய்யுங்கள். தவெக வேட்பாளர்கள் வேறு; நான் வேறு அல்ல’’ என்று தெரிவித்தார்.

‘‘திமுக வேறு; பாஜக வேறு அல்ல’’ - திருச்சியில் விஜய் பிரச்சாரம்
தமிழக அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை: அன்புமணி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in