தமிழகம்

உதவிபெறும் பள்ளிகளுக்கும் அரசு சலுகைகள் வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: அரசு பள்​ளி​களில் மாணவர்களுக்கு கிடைக்​கும் அனைத்து சலுகைகள், திட்​டங்​களி​லும் அரசு நிதி உதவி​பெறும் பள்​ளி​களில் படிக்​கும் மாணவர்​களை இணைக்க வேண்​டும் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் வலியுறுத்தியுள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை: தமிழகத்​தில் அரசு பள்ளி மாணவர்​களுக்கு கிடைக்​கும் 7.5 சதவீத இடஒதுக்​கீடு, அரசு நிதி உதவி​பெறும் பள்ளி மாணவ, மாணவி​களுக்கு கிடைப்​ப​தில்​லை. புது​மைப்​ பெண் திட்​டம் மூலம் கிடைக்​கும் ரூ.1,000 நிதி உதவி மாணவி​களுக்கு கிடைக்​க​வில்​லை.

          

மாதிரிப்​பள்​ளி, டிஜிட்​டல் கிளாஸ், உள்​கட்​டமைப்பு உள்​ளிட்​ட​வை​கள் நிதி உதவி​பெறும் பள்ளி மாணவர்​களுக்கு இன்​ன​மும் இல்​லை. 2021-ம் ஆண்டு திமுக தேர்​தல் அறிக்​கை​யில், 7.5 சதவீத இடஒதுக்​கீட்டை 10 சதவீத​மாக உயர்த்​தி, இதில் 2.5 சதவீதத்தை அரசு உதவி​பெறும் பள்ளி மாணவர்​களுக்கு உள் ஒதுக்கீ​டாக வழங்​கப்​படும் என வாக்​குறுதி அளிக்​கப்​பட்டது.

சட்​டப்​பேர​வை​யின் இறு​திக் கூட்​டத் தொடரிலும் நிறை வேற்​றப்​பட​வில்​லை. எனவே அரசு, அரசு நிதிஉதவி​பெறும் பள்​ளிகளில் படிக்​கும் மாணவ, மாணவி​களை, அரசு பள்​ளிகளில் மாணவர்​களுக்கு அளிக்​கும் அனைத்து சலுகைகள், திட்​டங்​களி​லும் இணைப்​ப​தே, தமிழகத்​தில் யாரை​யும் பின்​தங்க விட​மாட்​டோம் என்ற முழக்​கத்​துக்கு பொருத்​த​மாக இருக்​கும். இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார்.

ராம​தாஸ் வெளி​யிட்ட மற்​றொரு அறிக்​கை​யில், “அண்ணா பல்​கலைக்​கழக உறுப்​புக் கல்​லூரி​களில் 10 ஆண்​டு​களுக்கும் மேலாக பணி​யாற்றும் 328 உதவி பேராசிரியர்​களை கட்​டாயக் காத்​திருப்பு பட்​டியலில் சேர்த்​திருப்​பது மிகப்​பெரும் அநீ​தி.அவர்களுக்கு பணி நீட்​டிப்பு ஆணை வழங்​கி, ஊதியத்தை உயர்த்தி பணிநிலைப்பு செய்​திட வேண்​டும்​” என்று கூறியுள்​ளார்​.

SCROLL FOR NEXT