சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இந்த வரிசையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல்:
1.தளி - டி.ராமச்சந்திரன்
2.திருத்துறைப்பூண்டி (தனி) - மாரிமுத்து
3.திருவில்லிபுத்தூர் (தனி) - பி.மகாலிங்கம்
4.திருப்பூர் வடக்கு - ரவி
5.பவானிசாகர் (தனி) - பி.எல்.சுந்தரம்
இவர்களில் தளி தொகுதியில் போட்டியிடும் ராமச்சந்திரன் மற்றும் திருத்துறைப்பூண்டியில் போட்டியிடும் மாரிமுத்து ஆகியோர் 2021 தேர்தலில் சிபிஐ சார்பில் வெற்றி பெற்றவர்கள். தற்போது மக்கள் பிரதிநிதிகளாக உள்ள அவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளது சிபிஐ. ரவி, பி.எல்.சுந்தரம் ஆகியோர் கடந்த தேர்தலில் போட்டியிட்டு இருந்தனர். அவர்களுக்கும் அக்கட்சி மீண்டும் வாய்ப்பு வழங்கி உள்ளது.