தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்று​வோம்: தென்காசியில் ராஜ்நாத் சிங் உறுதி

செய்திப்பிரிவு

தமிழகத்​தில் தே.ஜ. கூட்​டணி ஆட்சி அமைந்​தவுடன் திருப்​பரங்​குன்​றத்​தில் கார்த்​திகை தீபம் ஏற்​று​வோம் என்று மத்​திய அமைச்​சர் ராஜ்​நாத் சிங் தெரி​வித்​துள்​ளார்.

தென்​காசி மாவட்​டம், வாசுதேவநல்​லூர் தொகு​தி​யில் பாஜக​வுக்கு ஆதர​வாக புளி​யங்​குடி அரசு மேல்​நிலைப் பள்ளி அரு​கில் இருந்து சிந்​தாமணி பேருந்து நிலை​யம் வரை மத்​திய பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் ரோடு ஷோவில் பங்​கேற்​றார். பின்​னர் அவர் பேசி​ய​தாவது: தமிழ்​நாட்​டில் சட்​டம், ஒழுங்கு சரி​யில்​லை. குற்​றங்​கள் அதி​கரித்​துள்​ளன. இது திமுக அரசு தோல்​வியடைந்​துள்​ளதை காட்​டு​கிறது.

இதற்கு முதல்​வர் ஸ்டா​லின், அவரது மகன் உதயநிதி ஸ்டா​லின் ஆகியோர்​தான் பொறுப்​பு. திமுக அமைச்​சர்​களும், எம்​எல்​ஏக்​களும் ஊழல் செய்​கின்​றனர். சென்னை உயர் நீதி​மன்​றம் இங்கு ஓர் அமைச்​சரை​யும், அவரது மகனை​யும் சொத்​துக்​கு​விப்பு வழக்​கில் குற்​ற​வாளி என்று சொல்​லி​யுள்​ளது. இன்​னொரு அமைச்​சரின் பெயர் சட்​ட​விரோத மணல் கொள்​ளை​யில் அடிபடு​கிறது. மணல் கொள்ளை மூலம் சட்​ட​விரோத​மாக 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கொள்​ளை​யடித்​துள்​ளனர்.

திமுக எம்​எல்ஏ ஒரு​வரின் மருத்​து​வ​மனை​யில் சிறுநீரக திருட்டு குறித்த குற்​றச்​சாட்​டில் விசா​ரணை நடக்​கிறது. திமுக ஆட்​சியை விரட்​டியடிக்க வேண்​டும். சட்​ட​விரோத​மாக சாரா​யம் வெளிப்​படை​யாக விற்​பனை​யாகிறது. தேசிய ஜனநாயக கூட்​டணி அரசு இந்த பிரச்​சினையை வேரோடு அழிக்​கும். நாங்​கள் ஆட்​சிக்கு வந்​தவுடன் ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் சாராய மாபி​யாக்​களை ஒழிப்​போம்.

திமுக அமைச்​சர் உதயநிதி ஸ்டா​லின் ஒரு நிகழ்ச்​சி​யில் சனாதன தர்​மத்தை ஒழிக்க வேண்​டும் என்று பேசி​னார். தமிழ்​நாட்​டில் முருக பக்​தர்​களின் பூஜை செய்​யும் உரிமை​களை​யும் பறிக்​கிறார்​கள். திருப்​பரங்​குன்​றம் முரு​கன் கோயி​லில் தீபம் ஏற்​றச் சென்ற பக்​தர்​களை தடுத்து நிறுத்தி கைது செய்​தனர். உயர் நீதி​மன்​றம் திருப்​பரங்​குன்​றம் மலை​யில் தீபம் ஏற்ற அனு​மதி அளிக்க வேண்​டும் என்று சொல்​லியது. தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி அமைந்​தவுடன் திருப்​பரங்​குன்​றத்​தில் கார்த்​திகை தீபம் ஏற்​று​வோம்.

நாடாளு​மன்​றத்​தில் பெண்​களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்​கீடு கொண்​டு​வரும் மசோ​தாவை திமுக மற்​றும் அதன் கூட்​டணி கட்​சிகள் தடுத்து நிறுத்​தின. தமிழ்​நாட்​டின் பொருளா​தார நிலைமை மோச​மாக உள்​ளது. மாநிலத்​தில் கடன் தொகை 10.27 லட்​சம் கோடி​யாக உயர்ந்​துள்​ளது. மாநிலத்​தின் கடன் மட்​டும் உயர்ந்​துள்​ளது. ஆனால் மக்​களுக்கு எது​வும் நடக்​க​வில்​லை. இவ்​வாறு அவர் பேசி​னார்.

SCROLL FOR NEXT