ரஜினி |கோப்புப் படம்

 
தமிழகம்

“நோ கமென்ட்ஸ்...” - செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு ரஜினி ரியாக்‌ஷன்

செய்திப்பிரிவு

சென்னை: விஜய்யின் தவெகவில் செங்கோட்டையன் இணைந்தது குறித்த கேள்விக்கு ‘நோ கமென்ட்ஸ்’ என்று கூறிவிட்டு நடிகர் ரஜினிகாந்த் சென்றார்.

கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக, நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யாவுடன் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவா புறப்பட்டு சென்றார்.

முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் கூறுகையில், “ஜெயிலர் இரண்டாம் பாகம் படத்தின் படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருக்கிறது. கோவாவில் சர்வதேச திரைப்பட விழாவில் எனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கின்றனர். அதற்காக நான் செல்கிறேன்.

உங்கள் அனைவரின் ஆசிர்வாதத்துடன், நான் தொடர்ந்து சூப்பர் ஸ்டாராக உள்ளேன். பிறந்தநாள் கொண்டாடும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்” என்றார். அப்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்ததை பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘நோ கமென்ட்ஸ்’ என்று கூறிவிட்டு ரஜினிகாந்த் சென்றார்.

SCROLL FOR NEXT