தமிழகம்

89 ஆயிரம் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை: முதல்வர் ஸ்டாலின் கோரிக்கைக்கு ராஜபக்ச மகன் நமல் வரவேற்பு

செய்திப்பிரிவு

ராமேசுவரம்: இலங்​கைத் தமிழர்​கள் 89 ஆயிரம் பேருக்கு இந்​தி​யக் குடி​யுரிமை வழங்க வேண்​டும் என்ற முதல்​வர் ஸ்டா​லின் கோரிக்​கைக்​கு, இலங்கை முன்​னாள் அதிபர் மகிந்த ராஜபக்​ச​வின் மகனும், நாடாளு​மன்ற உறுப்​பினரு​மான நமல் ராஜபக்ச வரவேற்​புத் தெரி​வித்​துள்​ளார்.

தமிழகத்​தில் தற்​போது 89 ஆயிரம் இலங்​கைத் தமிழர்​கள் வசிக்​கின்​றனர். இவர்​களில் பெரும்​பாலானோர் 30 ஆண்​டு​களுக்​கும் மேலாக இந்​தி​யா​வில் வசிப்​பவர்​கள்.

          

இவர்​களுக்கு இந்​திய குடி​யுரிமை வழங்க வேண்​டும் அல்​லது நீண்​ட​கால விசா வழங்க வேண்​டும் என்று வலி​யுறுத்​தி, பிரதமர் நரேந்​திர மோடிக்​கு, தமிழக முதல்​வர் மு.க. ஸ்டா​லின் கடிதம் எழு​தி​னார்.

இதை இலங்கை முன்​னாள் அதிபர் மகிந்த ராஜபக்​ச​வின் மகனும், அந்​நாட்டு நாடாளு​மன்ற உறுப்​பினரு​மான நமல் ராஜபக்ச வரவேற்​றுள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் வசிக்​கும் 89,000 இலங்​கைத் தமிழர்​களுக்கு சட்​டப்​பூர்வ அந்​தஸ்​து, கௌர​வம் மற்​றும் பாது​காப்​பான வாழ்வை உறு​திப்​படுத்​தும் நோக்​கில் முதல்​வர் ஸ்டா​லின் எடுத்​துள்ள இந்த முயற்​சியை வரவேற்​கிறோம். பல தலை​முறை​களாக அகதி​கள் முகாம்​களில் வாழும் மக்​களுக்கு இது நம்​பிக்​கையை அளிக்​கும்.

கடந்த காலங்​களி​லும், தேர்​தல் நேரங்​களி​லும் இவ்​வாறான கோரிக்​கைகள் முன்​வைக்​கப்​பட்​டன. எனவே, வரவிருக்​கும் மாநில தேர்​தல்​களை கருத்​தில் கொண்டு எடுக்​கப்​பட்ட அரசி​யல் நகர்​வாகவோ அல்​லது தேர்​தல்​கால அரசி​ய​லாக்​கப்​படும் முயற்​சி​யாகவோ இது இருக்​கக் கூடாது. இவ்​வாறு நமல் ராஜபக்ச தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT