தமிழகம்

டெல்டா, தென் கடலோர மாவட்டங்களில் இன்றுமுதல் 26-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் டெல்டா மற்​றும் தென் தமிழக கடலோர மாவட்​டங்​களில் இன்​று​முதல் ஏப்​.26-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

இது தொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தெலங்​கானா முதல் குமரிக்​கடல் வரை ராயலசீமா மற்​றும் உள் தமிழகம் வழி​யாக ஒரு வளிமண்டல காற்​றழுத்த தாழ்​வுப் பாதை சுமார் 1.5 கிமீ உயரம் வரை நில​வு​கிறது.

இதன் காரண​மாக இன்று (ஏப்​.21) மேற்​குத் தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள், தென் தமிழக கடலோர மாவட்​டங்​கள் மற்​றும் டெல்டா மாவட்​டங்​களின் கடலோரப் பகு​தி​களில் ஓரிரு இடங்​களி​லும், காரைக்​கால் பகு​தி​களி​லும் இடி, மின்​னல் மற்​றும் பலத்த காற்​றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்​தில்) லேசான மழை​யும், 22 முதல் 26-ம் தேதி வரை லேசானது முதல் மித​மான மழை​யும் பெய்​யக்​கூடும்.

உள் தமிழக மாவட்​டங்​களில் இன்​று​முதல் 24-ம் தேதிவரை அதி​கபட்ச வெப்​பநிலை ஒருசில இடங்​களில் வழக்​கத்தை விட 5 டிகிரி ஃபாரன்​ஹீட் அதி​க​மாக இருக்​கக்​கூடும். கடலோர தமிழகம், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் அதி​கபட்ச வெப்​பநிலை வழக்​க​மான அளவை ஒட்​டியே இருக்​கக்​கூடும்.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். அதி​கபட்ச வெப்​பநிலை 100 டிகிரி, குறைந்​த​பட்ச வெப்​பநிலை 82 டிகிரி ஃபாரன்​ஹீட் அளவை ஒட்டி இருக்​கக்​கூடும். இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT