தமிழகம்

பூங்கா ரயில் நிலையத்தில் தம்பதி தவறவிட்ட நகை மீட்பு: ரயில்வே போலீஸாருக்கு பாராட்டு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை பூங்கா ரயில் நிலை​யத்​தில் பொன்​னேரி தம்​பதி தவற விட்ட நகை பையை எழும்​பூர் ரயில்வே போலீ​ஸார் மீட்​டு, உரிய​வரிடம் ஒப்​படைத்​தனர்.

திரு​வள்​ளூர் மாவட்​டம் பொன்​னேரி அடுத்த அனுப்​பம்​பட்டு பகு​தி​யைச் சேர்ந்​தவர் பரத்​கு​மார். இவர் பழைய நகைகளை மாற்​று​வதற்​காக தனது மனைவி மற்​றும் உறவினர்​களு​டன் மின்​சார ரயி​லில் நேற்​று​முன்​தினம் சென்னை சென்ட்​ரல் நிலை​யத்​துக்கு வந்​தார்.

அங்​கிருந்து மின்​சார ரயி​லில் தியாக​ராய நகர் செல்​வதற்​காக, பூங்கா ரயில் நிலை​யத்​துக்கு உறவினர்​களு​டன் வந்​தார். தொடர்ந்​து, கடற்​கரை - தாம்​பரம் நோக்கி இயக்​கப்​பட்ட மின்​சார ரயி​லில் பரத்​கு​மார் மற்​றும் அவரது உறவினர்​கள் ஏறி பயணம் செய்து கொண்​டிருந்​தனர்.

அப்​போது, பரத்​கு​மாரின் மனைவி பூங்கா ரயில் நிலை​யத்​திலேயே கைப்​பையை மறந்து வைத்து விட்​டு, மின்​சார ரயி​லில் ஏறியது தெரிய​வந்​தது. அந்த பையில் இரண்டு செல்​போன்​கள், இரண்டு சவரன் நகை, ரூ.500 ஆகியவை இருந்​தன.

அதே​நேரத்​தில், பூங்கா ரயில் நிலை​யத்​தில் நடைமேடை​யில் ரோந்து சென்ற ரயில்வே போலீ​ஸாரிடம் அந்த பை சிக்​கியது. அந்த பையை திறந்து பார்த்​த​போது, அதில் மேற்​படி நகைகள், செல்​போன்​கள், பணம் இருந்​தன.

இதையடுத்​து, அந்த பையை எழும்​பூர் ரயில்வே காவல் நிலை​யத்​துக்கு போலீ​ஸார் கொண்டு வந்​தனர். இதற்​கிடை​யில், நகை, செல்​போன்​கள் அடங்​கிய பையை தவற​விட்​டது தொடர்​பாக, எழும்​பூர் ரயில்வே காவல் நிலை​யத்​தில் புகார் கொடுக்க பரத்​கு​மார் தனது மனை​வி​யுடன் வந்​தார்.

அப்​போது ரயில்வே போலீ​ஸார், பூங்கா நகர் ரயில் நிலை​யத்​தில் தாங்​கள் ஒரு கைப்​பையை ரோந்து பணி​யின் போது கைப்​பற்​றிய​தாக தெரி​வித்து அதை தம்​ப​தி​யிடம் காண்​பித்​தனர்.

அது தங்​களு​டையது தான் என பரத்​கு​மார் தம்​ப​தி​யினர் தெரி​வித்​தனர். அதில் என்​னென்ன வைத்​திருந்​தீர்​கள் என கேட்டு விசா​ரித்​து, அப்பை அவர்​களு​டையது தான் என போலீ​ஸார் உறுதி செய்​து, அவர்​களிடம் எழுதி வாங்கி கொண்டு பையை ஒப்​படைத்​தனர்.

தவற​விட்ட நகை, செல்​போன்​கள் இருந்த பை மீண்​டும் கிடைத்​ததை அடுத்து பரத்​கு​மார் தம்​ப​தி​யினர் போலீ​ஸாருக்கு நன்றி தெரி​வித்​து​விட்டு சென்​றனர். நகை பையை மீட்டு ஒப்​படைத்த போலீ​ஸாரை ரயில்​வே காவல்​ உயர​திகாரிகள் பாராட்டினர்.

SCROLL FOR NEXT