பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு: 2-வது சுற்றில் 40,299 பேருக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு: 2-வது சுற்றில் 40,299 பேருக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை
Updated on
1 min read

சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்​கை​யில் 2-வது சுற்று கலந்​தாய்​வில் 40,299 மாணவர்​களுக்கு கல்​லூரி ஒதுக்​கீட்டு ஆணை வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக மாநில தொழில்​நுட்​பக் கல்வி இயக்​குநரும், தமிழ்​நாடு பொறி​யியல் மாணவர் சேர்க்கை தலை​வரு​மான பி.ரத்​தின​சாமி நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: பொறி​யியல் மாணவர் சேர்க்கை கலந்​தாய்வு ஆன்​லைனில் நடை​பெற்று வரு​கிறது.

இதில் 2-வது சுற்று கலந்​தாய்​வில் தற்​காலிக ஒதுக்​கீட்டை உறுதி செய்​வதற்​கான அவகாசம் 8-ம் தேதி முடிவடைந்​தது. இந்​நிலை​யில், தங்​களுக்கு கிடைத்த இடத்தை ஏற்​றுக்​கொண்ட 40,299 மாணவர்​களுக்கு நிரந்தர ஒதுக்​கீட்டு ஆணை​களும், கிடைத்த இடத்தை ஏற்​றுக்​கொண்டு மேல்​நோக்​கிய நகர்​வுக்கு உறு​தி​ செய்த 10,548 பேருக்கு தற்​காலிக ஒதுக்​கீட்டு ஆணை​களும் 9-ம் தேதி (நேற்​று) வழங்​கப்​பட்​டன.

தற்​காலிக ஒதுக்​கீட்டு ஆணை பெற்ற மாணவர்​கள் தங்​கள் விருப்​பத் தேர்​வில் குறிப்​பிட்​டுள்ள தமிழ்​நாடு பொறி​யியல் சேர்க்கை உதவி மையத்​துக்​கும், நிரந்தர ஒதுக்​கீட்டு ஆணை பெற்​றவர்​கள் தங்​களுக்கு ஒதுக்​கீடு செய்​யப்​பட்ட கல்​லூரிக்​கும் ஆக.13-ம் தேதிக்​குள் சென்று அசல் சான்​றிதழ்​களை சமர்ப்​பித்​து, கல்விக் கட்​ட​ணத்​தை​யும் செலுத்த வேண்​டும்.

இல்​லா​விட்​டால், அவர்​களுக்​கான ஒதுக்​கீடு தானாகவே ரத்​தாகி​விடும். அதே சுற்​றில் மேல்​நோக்​கிய நகர்​வுக்​காக காத்​திருக்​கும் மாணவர்​களுக்கு அந்த இடங்​கள் ஒதுக்​கப்​படும்.

துணை கலந்​தாய்வு விண்​ணப்​பம்

இளநிலை கட்​டிடக் கலை படிப்​புக்​கான (பி.ஆர்க்.) கலந்​தாய்​வில் பொதுப் பிரி​வில் 622 மாணவர்​களும், அரசுப் பள்ளி மாணவர்​களுக்​கான 7.5 சதவீத உள்​ஒதுக்​கீட்​டுப் பிரி​வில் 40 பேரும் ஒதுக்​கீட்டு ஆணை பெற்​றுள்​ளனர்.

பொறி​யியல் மாணவர்​களுக்கு கடைசி​யாக ஒதுக்​கப்​பட்ட இடங்​கள் www.tneaonline.org என்ற இணை​யதளத்​தில் வெளிப்​படைத்​தன்​மை​யுடன்கொடுக்​கப்​பட்​டுள்​ளன.

பிஇ, பிடெக், பிஆர்க் படிப்​பு​களுக்​கான துணைக் கலந்​தாய்​வுக்கு பிளஸ் 2 துணைத் தேர்​வில் தேர்ச்சி அடைந்த மாணவர்​களும், பொதுக் கலந்​தாய்​வுக்கு விண்​ணப்​பிக்​காத மாணவர்​களும் ஆக.17 முதல் 31-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம்​. அவர்​களுக்​​கான துணைக்​ கலந்​​தாய்​வு செப்​.3 முதல்​ 7-ம்​ தேதி வரை நடை​பெறும்​. இவ்​​வாறு அவர்​ தெரிவித்​துள்​ளார்​.

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு: 2-வது சுற்றில் 40,299 பேருக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை
தமிழகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசுக்கு துணை நிற்க வேண்டும்: முதல்வருக்கு நயினார் வேண்டுகோள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in