தமிழகம்

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி பண வசூல் புகார்: திமுக பிரமுகரின் உறவினர் வீடுகளில் சோதனை

வங்கி பண பரிவர்த்தனை உள்பட 30 ஆவணங்கள் சிக்கின

செய்திப்பிரிவு

சென்னை: தனியார் பள்​ளி​களுக்கு அரசு அனு​மதி பெற்​றுத்​தரு​வ​தாக கூறி ரூ.100 கோடி மோசடி செய்​யப்​பட்ட விவ​காரத்​தில் திமுக பிர​முகர் முத்​துகு​மார் உறவினர்​கள் தொடர்​புடைய 4 இடங்​களில் போலீ​ஸார் சோதனை நடத்​தினர்.

திமுக ஆட்​சி​யின் போது (2021-26) தனியார் பள்​ளி​களுக்கு நிரந்தர அங்​கீ​காரம், பள்​ளி​களின் தரம் உயர்​வு, டிடிசிபி அனு​மதி உள்​ளிட்ட பல்​வேறு அரசு அனு​ம​தி​களைப் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறிப் பணம் வசூலித்து மோசடி செய்​யப்​பட்​ட​தாகத் தனி​யார் பள்​ளி​கள் கூட்​டமைப்​பின் செய​லா​ளர் இளங்​கோவன் சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகார் அளித்​திருந்​தார்.

இந்த வழக்​கில், சென்னை சாலிகி​ராமத்​தைச் சேர்ந்​தவரும், தமிழ்​நாடு தனி​யார் பள்​ளி​கள் சங்க கூட்​டமைப்​பின் தலை​வ​ராக இருந்​தவரு​மான திமுக பிர​முகர் பி.டி.அரசகு​மார், கடந்த ஜூன் 27-ம் தேதி கைது செய்​யப்​பட்​டார். பின்​னர் அவர் குண்​டர் தடுப்​புச் சட்​டத்​தின் கீழும் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

இவருடன் தொடர்​புடைய சுரேஷ், ராஜா ஆகிய மேலும் இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர். 177 தனி​யார் பள்​ளி​களிடம் இருந்து புகார்​கள் பெறப்​பட்​ட​தில், சுமார் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி செய்​யப்​பட்​டுள்​ளது தெரிய​வந்​தது.

முக்​கிய குற்​றச்​சாட்​டுக்​குள்​ளான அரசகு​மார் மற்​றும் அவரது குடும்​பத்​தினரின் 20 வங்​கிக் கணக்​கு​கள், தலைமறை​வாக உள்ள முன்னாள் அமைச்சர் அன்​பில் மகேஸின் நெருங்​கிய நண்​பரும், திமுக பிர​முகரு​மான முத்​துகு​மார் தொடர்​புடைய 29 வங்​கிக் கணக்​கு​கள் கண்​டறியப்​பட்​டு, அவற்​றில் நடை​பெற்ற நிதிப் பரிவர்த்​தனை​கள் குறித்​தும் ஆய்வு செய்​யப்​பட்​டது.

அன்​பில் மகேஸ் மீது ஊழல் தடுப்​புச் சட்​டத்​தின் கீழும் வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. சென்னை மற்​றும் திருச்​சி​யில் உள்ள அவருக்கு சொந்​த​மான இடங்​கள் மற்​றும் அவரது உதவி​யாளர்​கள் தொடர்​புடைய இடங்​கள் என மொத்​தம் 9 இடங்​களில் போலீ​ஸார் கடந்த 16-ம் தேதி சோதனை நடத்​தினர்.

அப்போது, வழக்கு தொடர்​பாக 118 ஆவணங்​கள், 18 செல்​போன்​கள், 3 லேப்​டாப்​கள், 8 பென்​டிரைவ்​கள், 2 ஹார்டு டிஸ்க்​கு​கள், ஒரு டேப்​லெட் மற்​றும் ஒரு ஆப்​பிள் ஐபேட் ஆகியவை கைப்​பற்​றப்​பட்​டன.

கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி சென்னை வேப்​பேரி​யில் உள்ள காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் உள்ள மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸாரின் அலு​வல​கத்​தில் அன்​பில் மகேஸிடம் 8 மணி நேரம் விசா​ரணை நடத்​தப்​பட்​டது. அப்​போது அவர் அளித்த பதில்​கள் அனைத்​தும் எழுத்து பூர்​வ​மாக​வும், வீடியோ​வாக​வும் வாக்​குமூலம் பதிவு செய்​யப்​பட்​டது.

இதையடுத்​து, அன்​பில் மகேஸின் முன்​னாள் சிறப்பு உதவி​யாள​ராக இருந்த பள்​ளிக்​கல்​வித் துறை இணை இயக்​குநர் அருள் முரு​கன் மற்​றும் நண்​பரும், உதவி​யாள​ரு​மான திருச்சி மாவட்​டம், லால்​குடியைச் சேர்ந்த வாளாடி கார்த்​திக் ஆகியோரிட​மும் போலீ​ஸார் பல கட்ட விசா​ரணை​களை நடத்தி முடித்​துள்​ளனர்.

இந்த வழக்​கில் அன்​பில் மகேஸின் நெருங்​கிய நண்​பர் முத்​துகு​மார் துருப்பு சீட்​டாக உள்​ளார். அவர் தொடர்ந்து தலைமறை​வாக உள்​ள​தால், அவர் வெளி​நாடு தப்​பிச் செல்​வதை தடுக்க அனைத்து விமான நிலை​யங்​களுக்​கும் போலீ​ஸார் லுக் அவுட் நோட்​டீஸ் பிறப்​பித்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், முத்​துகு​மார் சென்னை தி.நகரில் நடத்தி வந்த குளோபல் 360 டிகிரி என்ற நிறு​வனத்​தில் வைத்து தனி​யார் பள்ளி நிர்​வாகங்​களிடம் அரசு அனு​ம​தி​களை பெற்​றுத்​தரு​வ​தாக கூறி பணப்​பரிவர்த்​தனை​களில் ஈடு​பட்​ட​தாக​வும், இதில் அவரது உறவின​ரான சரவணன் என்​பவர் உடந்​தை​யாக செயல்​பட்​ட​தாக​வும் போலீஸ் விசா​ரணை​யில் தெரிய​வந்​தது.

இதையடுத்​து, முத்​துகு​மாரின் உறவினர்​களான சரவணன் மற்​றும் ரமேஷ் ஆகியோரின் வீடு​களில் சோதனை நடத்த சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் நடவடிக்கை மேற்​கொண்​டனர்.

அதன்​படி, நேற்று முன்​தினம் (26-ம் தேதி) கள்​ளக்​குறிச்சி மாவட்​டம் டி.குண்​ணத்​தூரில் உள்ள சரவணன் மற்​றும் ரமேஷ் ஆகியோரது வீடு​களி​லும், கள்​ளக்​குறிச்​சி​யில் கோகுல​கிருஷ்ணன் என்​பவரது வீடு மற்​றும் கடை​யிலும் என மொத்​தம் 4 இடங்​களில் ஒரே நேரத்​தில் சோதனை நடத்​தப்​பட்​டது.

நீண்ட நேரம் நடை​பெற்ற இந்த சோதனை​யின்​போது, வங்கி பரிவர்த்​தனை​கள் மற்​றும் பணப்​பரி​மாற்​றங்​களு​டன் தொடர்​புடைய​தாக கருதப்​படும் ஆவணங்​கள் உள்பட மொத்​தம் 30 ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​டன.

இந்த ஆவணங்​கள் மற்​றும் ஏற்​க​னவே சேகரிக்​கப்​பட்​டுள்ள வங்கி விவரங்​கள், காசோலைகள் மற்​றும் மின்​னணு சாதனங்​களை ஆய்வு செய்து போலீ​ஸார் விசா​ரணையை தீவிரப்​படுத்​தி​யுள்​ளனர்.

SCROLL FOR NEXT