தவெக சார்பில் ‘போதை இல்லா தமிழகம் உருவாக்குவோம்’ விழிப்புணர்வு: தாராபுரம் முதல் மதுராந்தகம் வரை சைக்கிள் பேரணி

அமைச்சர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்பு
போதையில்லா தமிழகம் என்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தாராபுரத்தில் தொடங்கிவைத்து சைக்கிள் ஓட்டிச் சென்ற அமைச்சர்கள் ஆனந்த், அருண்ராஜ், பர்வேஸ் உள்ளிட்டோர்.

போதையில்லா தமிழகம் என்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தாராபுரத்தில் தொடங்கிவைத்து சைக்கிள் ஓட்டிச் சென்ற அமைச்சர்கள் ஆனந்த், அருண்ராஜ், பர்வேஸ் உள்ளிட்டோர்.

Updated on: 
1 min read

தாராபுரம்: தமிழகத்​தில் போதைப்​பொருள் பயன்​பாட்டை முற்​றி​லும் ஒழிக்​கும் வகை​யிலும், இளைஞர்​கள் மற்​றும் மாணவர்​களிடையே ஆரோக்​கிய​மான வாழ்க்கை முறையை வலி​யுறுத்​தும் நோக்​கிலும் தவெக சார்​பில் 'போதை இல்லா தமிழகம் உரு​வாக்​கு​வோம்' என்ற விழிப்​புணர்வு சைக்​கிள் பேரணி தாராபுரத்​தில் தொடங்கி வைக்​கப்​பட்​டது.

இதன் தொடக்க விழாவில், தவெக அமைச்​சர்​கள் என்.ஆனந்த், அருண் ராஜ் மற்​றும் பர்​வேஸ் உள்​ளிட்டோர் கலந்​து​கொண்டு கொடியசைத்து சைக்​கிள் பேரணி​யைத் தொடங்கி வைத்​து சைக்கிள் ஓட்டினர்.

தாராபுரத்​தில் தொடங்​கி​யுள்ள இந்த விழிப்புணர்வு சைக்​கிள் பேரணியானது பல்​வேறு முக்​கியப் பகு​தி​கள் வழி​யாகச் சென்று மது​ராந்​தகம் தொகுதியை அடைகிறது. வழிநெடு​கிலும் பொது​மக்​களுக்கு போதைப்​பொருட்​களால் ஏற்​படும் தீமை​கள் குறித்​தும், சமூகப் பாதிப்​பு​கள் குறித்​தும் விழிப்​புணர்வு துண்​டுப் பிரசுரங்​கள் வழங்​கப்​பட்டு பிரச்​சா​ரம் மேற்​கொள்​ளப்பட இருக்​கிறது.

இதுகுறித்து அமைச்​சர் அருண்​ராஜ் பேசியதாவது: ’ஜனநாயகத்தை போற்​றிப் பாது​காக்​க​வும், போதையில்லா தமிழகத்தை உரு​வாக்​க​வும், பெண்​கள் பாது​காப்பை உறுதிசெய்​ய​வும் பொதுமக்​களிடையே ஜனநாயக விழிப்​புணர்வை ஏற்​படுத்​த​வும் தமிழக வெற்​றிக் கழகத்​தின் சார்​பில் தாராபுரத்​தில் சைக்​கிள் பேரணி நடை​பெற்​றது.

இந்​தி​யா​வின் மிகப்​பெரிய பெரு​மையே அதன் ஜனநாயகம் தான். அந்த ஜனநாயகத்​தின் மாண்​பைப் போற்​றிப் பாது​காக்க வேண்​டிய கடமை ஒவ்​வொரு குடிமக​னுக்​கும் உண்​டு. கடந்த தேர்​தலில் தாராபுரம் தொகு​தி​யில் வெற்றி வாய்ப்பை நாம் இழந்​திருந்​தா​லும், இத்​தொகுதி மக்​களிடையே அரசி​யல் மற்​றும் ஜனநாயக விழிப்​புணர்வை ஏற்​படுத்​த​வும், மாற்​றத்​துக்​கான இந்த புரட்​சி​யில் அவர்​களை​யும் பங்​கெடுக்​கச் செய்​ய​வும் இந்த சைக்​கிள் பேரணி நடத்​தப்​பட்​டது.

இந்த பேரணி​யானது வெறும் தேர்​தலுக்கோ அல்​லது வெற்​றிக்காகவோ அல்ல; மக்​களிடையே ஜனநாயகப் பண்​பு​களை​யும் விழிப்​புணர்​வை​யும் தொடர்ந்து ஏற்​படுத்​து​வதே இந்த சைக்கிள் பேரணியின் முதன்மை நோக்​கம். இவ்வாறு அமைச்​சர் அருண்​ராஜ் தெரி​வித்​தார். நிகழ்ச்​சி​யில் ஏராள​மான தவெக கட்​சித் தொண்​டர்​கள், இளைஞர்​கள் மற்​றும் பொது​மக்​கள் பெருந்​திரளாகக் கலந்து கொண்டு சைக்​கிள் ஓட்டி விழிப்​புணர்வு ஏற்​படுத்​தினர்​.

<div class="paragraphs"><p>போதையில்லா தமிழகம் என்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தாராபுரத்தில் தொடங்கிவைத்து சைக்கிள் ஓட்டிச் சென்ற அமைச்சர்கள் ஆனந்த், அருண்ராஜ், பர்வேஸ் உள்ளிட்டோர்.</p></div>
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 15,000 ரன்கள்: டெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in