திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்திக்கு செங்கோல் வழங்கப்பட்டது. படம்: மு.லெட்சுமி அருண்.

 
தமிழகம்

மோடிக்கு தொடர் தோல்வி பரிசளிக்கப்படும்: நாங்குநேரியில் ராகுல் காந்தி விருப்பம்

செய்திப்பிரிவு

“அரசி​யல் சாசனத்தை சிதைப்​ப​தற்​கான எந்த முயற்​சி​யை​யும் திமுக, காங்​கிரஸ் உள்​ளிட்ட இண்​டியா கூட்​டணி கட்​சிகள் முறியடிப்​போம். மோடிக்கு தொடர் தோல்வி பரிசளிக்​கப்​படும்” என மக்​களவை எதிர்க்கட்சி தலை​வர் ராகுல் காந்தி தெரி​வித்​தார்.

திருநெல்​வேலி மாவட்​டம் நாங்​குநேரி​யில் நேற்று நடை​பெற்ற தேர்​தல் பிரச்​சார பொதுக்​கூட்​டத்​தில் திருநெல்​வேலி, தென்​காசி மாவட்ட காங்​கிரஸ் வேட்​பாளர்​கள் ரூபி மனோகரன் வி.பி. துரை, சங்கை கணசேன், திமுக வேட்​பாளர்​கள் மு.அப்​துல் வகாப், சுப்​பிரமணி​யன், மு.அப்​பாவு, மனோஜ் பாண்​டியன் ஆகியோரை ஆதரித்து ராகுல் காந்தி பேசி​ய​தாவது: ஒவ்​வொரு மாநில​மும் தங்​களை தாங்​களே ஆண்டு கொள்ள வேண்​டும். அதற்​கான உரிமை இருக்க வேண்​டும் என நாங்​கள் நினைக்​கிறோம். ஆனால், அவர்​கள் அனைத்து மாநில​மும் ஆர்​எஸ்​எஸ் சிந்​தாத்​தத்​தின் கீழ் அடிபணிந்து நிற்க வேண்​டுமென நினைக்​கிறார்​கள். இந்த தேர்​தலின் மூலம் எப்​படி​யா​வது தமிழ்​நாட்​டில் ஊடுருவ வேண்​டும் என்று பாஜக நினைக்​கிறது.

பாஜக-​வால் தமிழ் மொழியை​யும், இனத்​தை​யும், வரலாற்​றை​யும், பாரம்​பரி​யத்​தை​யும், கலா​சா​ரத்​தை​யும் நேரடி​யாக தாக்க முடி​யாது என்​ப​தால், அதி​முக என்ற முகமூடியை இங்கு பயன்​படுத்​துகிறார்​கள். இந்த தேர்​தல் என்​பது பாஜக-​வின் சித்​தாந்​தத்​திற்கு எதி​ரான போராட்​டம். ஒரு பக்​கம் காங்​கிரஸ் பேரியக்​க​மும், திமுக மற்​றும் கூட்​டணி கட்​சிகள் கொண்ட இண்​டியா கூட்​ட​ணி​யும், தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லினும் உள்​ளோம். நாங்​கள் தமிழகத்​தின் பண்​பாடு, கலா​சா​ரம் ஆகிய​வற்​றைப் போற்​றிப் பாது​காக்க முயற்சி எடுத்து வரு​கிறோம். ஆனால், எதிர்​புறம் அதி​முக-​வும் அவர்​களது முகமூடி அணிந்​துள்ள பாஜக-​வும் தமிழகத்​தின் எதிர்​காலத்தை அழிக்க நினைக்​கின்​றன.

கடந்த சில நாட்​களுக்கு முன்பு இந்​திய அரசி​யலமைப்பு சாசனத்​தின் மீது தாக்​குதலை நடத்த முயற்​சித்​தார்​கள். மகளிருக்​கான இட ஒதுக்​கீடு மசோ​தாவை நிறைவேற்​றப் போவ​தாகச் சொல்​லி​விட்டு தொகுதி மறு​வரையறை செய்து தேர்​தல் வரைபடத்தை மாற்ற சதி திட்​டத்தை செய்​தார்​கள். ஒவ்​வொரு மாநிலத்​தி​லும் சட்​டப் பேர​வை, நாடாளு​மன்ற தொகு​தி​களை மாற்றி அமைக்க முயற்சி மேற்​கொண்​டார்​கள். தமிழகம் உள்​ளிட்ட தென் மாநிலங்​கள், வடகிழக்கு மாநிலங்​களில் அரசின் பிர​தி​நி​தித்​து​வத்தை குறைக்க பாஜக முயற்சி மேற்​கொண்​டது.

தொகுதி மறு​வரையறை மூலம் மாநிலங்​களின் தனித்​து​வத்தை சிதைக்க பாஜக முயற்சி மேற்​கொண்​டது. அதனால்​தான் எதிர்க்​கட்​சிகள் நாங்​கள் ஒன்​றிணைந்து மகத்​தான தோல்​வியை மோடிக்கு பரிசளித்​தோம். அரசி​யல் சாசனத்தை சிதைப்​ப​தற்​கான எந்த முயற்​சி​யை​யும் திமுக, காங்​கிரஸ் உள்​ளிட்ட இண்​டியா கூட்​டணி கட்​சிகள் முறியடிப்​போம். மோடிக்கு தொடர் தோல்வி பரிசளிக்​கப்​படும்.

மகளிருக்​கான இட ஒதுக்​கீட்டை நிறைவேற்ற வேண்​டும் என பாஜக முயற்​சித்​தால், ஏற்​கெனவே 2023-ல் அந்த மசோதா நிறைவேற்​றப் பட்​டது. 3-ல் 1 பங்கு இடத்தை மகளிருக்கு நாடாளு​மன்​றத்​தில் தரு​வ​தாக அதில் தெளி​வாக சொல்​லப்​பட்​டுள்​ளது. அந்த சட்​டத்​தின்​படி தொகுதி மறு​வரையறை செய்ய வேண்​டிய தேவை கிடை​யாது. இந்​தி​யா​வின் தேர்​தல் வரைபடத்தை மாற்றி அமைக்க வேண்​டிய அவசி​யம் கிடை​யாது. அந்த மசோதா நிறைவேற்​றும் போது மகளிர் இட ஒதுக்​கீட்டு மசோதா இன்​னும் 10 ஆண்​டு​களில் நிறைவேற்​றப்​படும் என பாஜக-​வினர் சொன்​னார்​கள். நாங்​கள் உடனடி​யாக செயல்​படுத்த வேண்​டும் என வலி​யுறுத்​தினோம்.

பாஜக மூன்​றில் ஒரு பங்கு மகளிருக்​கான மசோ​தாவை நிறைவேற்ற விரும்​பி​னால் நாங்​கள் அந்த மசோ​தாவை ஆதரிக்​கிறோம். எதிர்க்​கட்​சிகள் அதற்கு உறு​துணை​யாக இருக்​கும் என்ற உத்​தர​வாதம் அளிக்​கிறேன். தமிழகத்​திற்கென சிறப்​பான சமூக நீதி கொள்​கைகள் உள்​ளன. தமிழகம் மகத்​தான வளர்ச்சி திட்​டத்தை நிறைவேற்​றிக் காட்​டி​யுள்​ளது. தமிழகத்​தில் செயல்​படுத்​தப்​பட்​டுள்ள வளர்ச்​சித் திட்​டம் என்​பது அனைத்து சமூகத்தை சேர்ந்​தவருக்​கும் மிக பெரிய ஆதர​வாக இருக்​கிறது. தமிழகத்​தில் வளர்ச்​சிக்​கான மிகப்​பெரிய அடித்​தளம் காம​ராஜ​ரால் அமைக்​கப்​பட்​டது. காம​ராஜரை மட்​டுமல்ல காம​ராஜர் கொண்டு வந்த தமிழகத்​தின் வளர்ச்​சிக்​கான ஆதரவு திட்​டங்​களை​யும் பாஜக வெறுக்​கிறது.

பாஜக தமிழகத்​தின் சமூக நீதி திட்​டங்​கள், சமூக நீதி வரலாறுகள் வெளி மாநிலங்​களுக்​குச் சென்​று​விடக்​கூ​டாது என நினைக்​கிறது. திமுக சமூகநீ​தியை உயர்த்​திப் பிடிப்​ப​தில் மகத்​தான பங்​களிப்பை செய்து வரு​கிறது. தமிழ்​நாட்​டில் மகளிருக்கு ரூ.1,000 என்ற சிறப்​பான திட்​டம் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. காம​ராஜருக்கு அடுத்​த​படி​யாக பள்​ளி​களில் காலை உணவு சிறப்​பான முறை​யில் வழங்​கப்​பட்டு வரு​கிறது. இது​போல் சமூகநீ​தி​யை​யும் வளர்ச்​சி​யை​யும் ஆழப்​படுத்தி அதி​க​மான இடங்​களுக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறோம்.

மீண்​டும் ஆட்சி வந்​தால் மகளிருக்கு ரூ.ஆ​யிரத்​திலிருந்து ரூ.2 ஆயிர​மாக உரிமைத் தொகை உயர்த்தி வழங்​கப்​படும். மூத்த குடிமக்​களுக்கு மாற்​றுத்​திற​னாளி​களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்​கப்​படும். தமிழகத்​தில் உயர் கல்வி மாணவர்​களுக்கு ரூ.2 ஆயிரம் உதவித்​தொகை வழங்​கப்​படும் ஆட்​சிக்கு வந்து 300 நாட்​களுக்​குள் அனைத்து வித​மான அரசின் காலிப் பணி​யிடங்​களும் நிரப்​பப்​படும்.

ஆர்​எஸ்​எஸ், பாஜக-வை தமிழகத்​திற்​குள் வரவி​டா​மல் தடுப்​பது தான் இந்த தேர்​தலில் முக்​கிய நோக்​கம். ஒற்​றுமை, அன்​பு, சமத்​து​வம் கொண்ட நாட்டை நாங்​கள் விரும்​பு​கிறோம். வன்​முறை, வெறுப்​பு, கோபம் உள்​ளிட்​ட​வற்றை இந்த மண்​ணின் மீது பாஜக திணிக்க வி​டா​மல் தடுத்து வரு​கிறோம். நான் உங்​கள்​ சகோ​தர​னாக உங்​கள்​ படைவீர​னாக எப்​போதும்​ டெல்​லி​யில்​ இருப்​பேன்​. இவ்​வாறு அவர் பேசி​னார்​.

அதிமுகவை பாராட்டிய ராகுல்: திமுகவினர் அதிர்ச்சி

ராகுல் பேசுகையில், ‘‘காங்​கிரஸ், திமுக-வைப் போல ஒரு காலத்​தில் அதி​முக-​வும் தமிழகத்​தின் வளர்ச்சிக்கு மிகப்​பெரிய பங்​காற்​றி​யிருக்​கிறது. அதி​முக-​வில் மகத்​தான தலை​வர்​கள் இருந்​தார்​கள். அவர்​கள் தமிழ் வரலாற்​றை​யும் எதிர்​காலத்​தை​யும் பாது​காத்​தார்​கள். ஆனால் இப்​போதுள்ள அதி​முக, பழைய அதி​முக கிடை​யாது. தற்​போது ஒரு வெற்​றுக் கூடாக அதி​முக உள்​ளது.

பாஜக மற்​றும் ஆர்​எஸ்​எஸ்​ஸுக்கு அதி​முக அடிபணிந்​து​விட்​டது. அதி​முக தலை​வர்​களை ஊழல் என்ற ஒரு பொறி​யில் சிக்க வைத்​து, பாஜக-வுக்கு அடிபணிந்து சேவகம் செய்ய வைத்து விட்​டது’’ என்றார். தங்களது பரம விரோதியான அதிமுகவை தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றியுள்ளது என்று ராகுல் பாராட்டியதால் கூட்டத்தில் இருந்த திமுகவினர் அதிர்ச்சியடைந்தனர்.

SCROLL FOR NEXT