ராகுல் காந்தி

 
தமிழகம்

நெல்லை, குமரி, தூத்துக்குடியில் நாளை ராகுல் காந்தி பிரச்சாரம்

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: தமிழகத்​தில் தேர்​தல் பிரச்​சா​ரம் இறு​தி​கட்​டத்தை எட்​டி​யுள்​ளது. குமரி மாவட்​டத்​தில் பிரதமர் மோடி, தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி, தவெக தலை​வர் விஜய் உள்ளிட்ட தலை​வர்​கள் பிரச்​சா​ரம் செய்தனர்.

இந்​நிலை​யில், காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல்​காந்தி நாளை (20-ம் தேதி) கன்​னி​யாகுமரி மாவட்​டம் வரு​கிறார். டெல்​லி​யில் இருந்து விமானத்​தில் திரு​வனந்​த​புரம் வரும் அவர், அங்​கிருந்து ஹெலி​காப்​டரில் குமரி மாவட்​டம் குளச்​சல் தொகு​திக்​குட்​பட்ட மண்​டைக்​காடு அருகே லட்​சுமிபுரம் கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி மைதானத்​துக்கு வந்து இறங்​கு​கிறார். அதே மைதானத்​தில், காலை 10 மணி​யள​வில் நடை​பெறும் பிரச்​சாரப் பொதுக்​கூட்​டத்​தில் பேசுகிறார்.

பொதுக்​கூட்​டம் முடிந்த பின்​னர் மதி​யம் 12.30 மணி​யள​வில் நெல்லை மாவட்​டம் நாங்​குநேரி​யிலும், அதை தொடர்ந்​து, தூத்​துக்​குடி மாவட்​டம் ஸ்ரீவை​குண்​டத்​தி​லும் ராகுல் பேசுகிறார். அவர் பொதுக்​கூட்​டத்​தில் பங்​கேற்​கும் மூன்று தொகு​தி​களி​லுமே காங்​கிரஸ் போட்​டி​யிடு​கிறது என்​பது குறிப்​பிடத்​தக்​கது. நிகழ்ச்​சியை முடித்​துக் கொண்டு மாலை​யில் தூத்​துக்​குடி விமான நிலை​யத்​திலிருந்து சென்​னைக்கு புறப்​பட்​டுச் செல்​கிறார்​.

SCROLL FOR NEXT