நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் சகோதரர் முன்னெடுக்கும் நீட் ரத்து தொடர்பான கையெழுத்து இயக்கத்தில் ராகுல் காந்தி கையெழுத்திட்டார்.

 

படம்: எஸ்.சத்தியசீலன்

தமிழகம்

“நீட் தேர்வை ரத்து செய்வதே நாட்டுக்கு பலன் தரும்” - பயப்படாமல் போராட வருமாறு மாணவர்களுக்கு ராகுல் அழைப்பு

ஆர்.ஷபிமுன்னா, வே.கோபாலகிருஷ்ணன்

சென்னை: “பயம், வெறுப்பு மற்​றும் பிரி​வினையைப் பயன்​படுத்தி நாட்டை ஆள பிரதமர் மோடி நினைக்​கி​றார். கடந்த 15 ஆண்​டு​களாக அவர் நடத்தி வந்த நாடகம் இப்​போது முடிவுக்கு வந்​து​விட்​டது” என மக்களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி தெரி​வித்​தார்.

இந்​திய கல்வி முறை​யில் நடை​பெறும் முறை​கேடு​கள், நீட் உள்​ளிட்ட தேர்​வுத்​தாள் கசிவு​கள், கல்விக் கட்டண உயர்வு மற்​றும் வேலை​வாய்ப்​பின்மை போன்ற காரணங்​களால் பாதிக்​கப்​பட்​டுள்ள மாண​வர்​களை திரட்டி நாடாளு​மன்ற எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி ‘மாண​வர்​களின் குரல்’ என்ற நிகழ்ச்சி வாயி​லாக அவர்​களு​டன் பேசி வரு​கி​றார். அதன்​படி சென்​னை​யில் உள்ள தீவுத் திடலில் நேற்று மாண​வர்​கள் முன்​னிலை​யில் ராகுல் காந்தி பேசி​னார்.

அப்​போது அவர் கூறிய​தாவது: நான் எப்​போது இந்த மண்​ணுக்கு வந்​தா​லும், உங்​களிட​மிருந்​தும் தமி​ழ​கத்​தின் ஞானத்​தி​லிருந்​தும் ஏதே​னும் ஒன்​றைக் கற்​றுக்​கொண்​டு​தான் செல்​கிறேன். தமிழ்​நாட்​டின் மீதும் தமிழ் கலாச்​சா​ரம் மீதும் முழு அளவி​லான தாக்​குதல் நடத்​தப்​படு​கிறது. புதிய கல்விக் கொள்கை மூலம் தமி​ழ​கத்​துக்கு வர வேண்​டிய ரூ.3,300 கோடியை மத்​திய அரசு நிறுத்தி வைத்​துள்​ளது. நீட் தேர்வு காரண​மாக எம்​பிபிஎஸ் இடங்​களில் தமிழ் வழி மாண​வர்​களின் பங்கு 87 சதவீதம் வீழ்ச்​சி​யடைந்​துள்​ளது.

ஆளுநர் மூலம் ஆர்​எஸ்​எஸ் ஆட்​களைப் பல்​கலைக்​கழ​கங்​களில் திணிப்​ப​தால், 70 சதவீத மாநிலப் பல்​கலைக்​கழ​கங்​கள் துணைவேந்​தர்​கள் இல்​லாமல் இயங்​கு​கின்​றன. மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழ்​மொழி இரண்​டாம் பட்​சம் என்று வெளிப்​படை​யாகக் கூறுகி​றார். தொகுதி மறு​வரையறை மூலம் தமி​ழ​கத்​தின் குரலை ஒடுக்க நினைக்​கி​றார்​கள். இதையெல்​லாம் நாங்​கள் ஒரு​போதும் அனு​ம​திக்க மாட்​டோம்.

மொழி திணிப்​பில் தமி​ழ​கத்​துக்கு கல்விக்​கான ரூ.3,300 கோடி நிதி நிறுத்தி வைத்​திருக்​கி​றார்​கள். 70 சதவி​கித பல்​கலை​கழ​கங்​களில் துணைவேந்​தர்​கள் இல்​லை. இதை நிறுத்தி வைத்​துள்ள தமிழ்​நாடு ஆளுநர், உங்​கள் கல்வி நிலை​யங்​களில் ஆர்​எஸ்​எஸ் அமைப்​பினரை அமர்த்தி அவர்​கள் நிர்​வாகிக்க வேண்​டும் என விரும்​பு​கி​றார். தொகுதி மறு​வரையறை​யில் தமிழ்​நாட்​டின் எம்​பிக்​கள் எண்​ணிக்​கையை நாடாளு​மன்​றத்​தில் குறைக்​க​வும் விரும்​பு​கின்​ற​னர். ஆனால், இவர்​களால் தமிழ்​நாட்​டை​ தொடக்​கூட முடி​யாது.

பயம், வெறுப்பு மற்​றும் பிரி​வினையைப் பயன்​படுத்தி நாட்டை ஆள பிரதமர் மோடி நினைக்​கி​றார். கடந்த 15 ஆண்​டு​களாக அவர் நடத்தி வந்த நாடகம் இப்​போது முடிவுக்கு வந்​து​விட்​டது. எதிர்க்​கட்​சிகள் அவரைச் சூழ்ந்து கொண்​டுள்​ளன. தேசத்​துக்கு எதி​ராக அவர் செய்த குற்​றங்​களுக்கு அவர் சட்​டத்​தின் முன் நிறுத்​தப்​படு​வது உறு​தி.

மோடி எவ்​வளவு பெரிய சக்தி வாய்ந்​தவ​ராக இருந்​தா​லும், மாண​வர்​களின் குரலை​யும் இந்த நாட்​டின் ஆன்​மாவை​யும் யாராலும் ஒடுக்க முடி​யாது. மாண​வர்​களே, நீங்​கள் பயப்​படத் தேவை​யில்​லை; நாங்​கள் உங்​களு​டன் இருக்​கி​றோம். உங்​கள் எதிர்​காலத்​தைப் பாது​காத்​துக் கொள்​ளுங்​கள், எதை​யும் கேள்வி​களுக்​கேற்ப ஆராய்ந்து தெரிந்து கொள்​ளுங்​கள். ஒன்​றாக இணைந்து நாம் மோடியைத் தகர்ப்​போம். இவ்​வாறு அவர் பேசி​னார்.

தொடர்ந்து மாண​வர் இந்​திரப்​பிரியன் பேசுகை​யில், “பெரி​யாரை வெறும் நாத்​தி​க​ராகப் பார்க்​காமல் சமூக நீதி மற்​றும் பெண் விடு​தலைக்​காகப் போராடிய தலை​வ​ராக அனை​வ​ரும் வாசிக்க வேண்​டும்” என்​றார்.

அப்​போது குறுக்​கிட்ட ராகுல் காந்​தி, “எங்​குமே கேள்வி கேட்​கக் கூடாது, எல்​லா​வற்​றை​யும் குருட்​டுத்​தன​மாக நம்ப வேண்​டும் என்று சொல்​பவர்​களிடம் பெரி​யார் என்ன சொல்​லி​யிருப்​பார்? மோடி​யிடம் பெரி​யார் என்ன சொல்​லி​யிருப்​பார்?” என்ற கேள்வி​களை கேட்​டார். அதற்கு இந்​திரப்​பிரியன், “ஆணா​திக்​கம், மதம் மற்​றும் சாதிய ஆணவத்தை எதிர்த்து மனிதநே​யத்​தையே முதன்​மை​யாகப் பேண வேண்​டும் என்று பெரி​யார் மோடி​யிடம் சொல்​லி​யிருப்​பார்” என்​றார்.

பாலவாக்கத்தில் உள்ள உணவகத்தில் முதல்வர் விஜய் உடன் தேநீர் அருந்திய ராகுல்காந்தி.

முதல்வர் விஜய் அளித்த விருந்து

‘மாணவர்கள் குரல்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுவதற்காக ராகுல் காந்தி நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து காரில் நேரடியாக நீலாங்கரையில் உள்ள முதல்வர் விஜய் வீட்டுக்கு ராகுல் சென்றார். அவரை வாசலில் சென்று வரவேற்ற முதல்வர் விஜய் தனது இல்லத்தில் மதிய உணவு விருந்து அளித்தார்.

இதன் பின்னர் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பாக இருவரும் கட்சி நிர்வாகிகள் இல்லாமல் தனியாக சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக பிரதமர் வேட்பாளர் தொடர்பாக தவெகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே ஒரு சிறிய சலசலப்பு தொடர்ந்து நிலவி வருகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. மேலும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக முதல்வர் விஜய்க்கு ராகுல் தனது வாழ்த்துகளை கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சந்திப்புக்கு பின்னர் இருவரும் ஒரே காரில் பயணம் செய்தனர். தொடர்ந்து பாலவாக்கத்தில் உள்ள பிரபல கிரிக்கெட் வீரர் தோனிக்கு சொந்தமான 7 படல் கஃபே உணவகத்துக்குச் சென்று இருவரும் தேநீர் அருந்தினர்.

SCROLL FOR NEXT