அமைச்சர் ரகுபதி |கோப்புப் படம்

 
தமிழகம்

அதிமுக ஆட்சியைவிட சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது: பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதில்

செய்திப்பிரிவு

அ​தி​முக ஆட்​சி​யை​விட சட்​டம் - ஒழுங்கு தற்​போது சிறப்​பாக உள்​ள​தாக​வும், பொது மக்​கள் பாது​காப்​போடு இருப்​ப​தாக​வும் இயற்கை வளங்​கள் துறை அமைச்​சர் எஸ்​.ரகுபதி தெரி​வித்​தார்.

இதுகுறித்து சென்னை அண்ணா அறி​வால​யத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் மேலும் கூறிய​தாவது: எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி பல்​வேறு பொய்​யான குற்​றச்​சாட்​டு​களை ஒரு ஆர்ப்​பாட்​டத்​தில் பேசி​யுள்​ளார்.

நாங்​கள் 2 தினங்​களுக்கு முன்பு தமிழக மக்​களுக்கு சிலிண்​டர் தடை​யில்​லாமல் கிடைக்க வேண்​டும் என்​ப​தற்​காக மத்​திய அரசை கண்​டித்து ஆர்ப்​பாட்​டம் நடத்​தினோம். ஆனால், பழனி​சாமி மாநில அரசை கண்​டித்து பல்​வேறு குற்​றச்​சாட்​டு​களை முன்​வைத்து ஆர்ப்​பாட்​டத்தை நடத்​தி​யுள்​ளார்.

          

அதில் கூட காஸ் சிலிண்​டர் மக்​களுக்கு தட்​டுப்​பாடின்றி கிடைக்க ஏற்​பாடு செய்​யுங்​கள் எனும் கோரிக்​கையை தனது தோழமை கட்​சி​யான பாஜக-​விடம் முன்​வைக்க மறுத்​து​விட்​டார். அதி​முக ஆட்​சி​யிலும் போதைப்​பொருள் நடமாட்​டம் இருந்​தது. குட்கா​வுக்​காக ஒரு அமைச்​சர் மீதே எஃப்​ஐஆர் போடப்​பட்​டது எல்​லாம் அதி​முக ஆட்​சி​யில் தான் நடந்​தது. இந்த 75 நாட்​களில் 246 கொலை​கள் நடந்​திருப்​ப​தாக அவர் சொல்​கி​றார்.

அதி​முக ஆட்​சி​யில் தான் கொலை​கள் அதி​கம் என்​பது தரவு​களோடு நிரூபிக்​கப்​பட்​டுள்​ளது. அந்த புள்ளி விவரங்​களை மறுத்து பழனி​சாமி சொல்லி இருந்​தால் அது நியா​யம். எனவே, அதி​முக ஆட்​சி​யை​விட இன்​றைக்கு சட்​டம் -ஒழுங்கு காப்​பாற்​றப்​பட்டு மக்​கள் பாது​காப்​போடு இருக்​கி​றார்​கள்.

அதே​போல், பெண்​கள் மீது திடீரென பழனி​சாமிக்கு பாசம் வந்​துள்​ளது. பல்​வேறு சர்​வேக்​களில் 80 சதவீத பெண்​கள் திமுக கூட்​ட​ணிக்​குத் தான் வாக்​களிக்​கப் போகி​றார்​கள் எனும் தகவல்​கள் வரு​கின்​றன. அதை தடுப்​ப​தற்​காக தமி​ழ​கத்​தில் பெண்​களுக்கு பாது​காப்பு இல்லை என்ற ஒரு போலி நாடகத்தை உரு​வாக்க முயற்​சிக்​கி​றார். ஒரு சில சம்​பவங்​கள் ஆங்​காங்கே நடந்​திருக்​கலாம். அதை காவல் துறை உடனே கண்​டு​பிடித்து உரிய நடவடிக்​கை​களை எடுத்​து​வ​ரு​கிறது.

கடந்த மாதம் பழனி​சாமி பிரச்​சா​ரப் பயணத்தை தொடங்​கி​னார். சில நாட்​களில் பயணத்தை நிறுத்​திவிட்​டார். பிரச்​சா​ரப் பயணத்​தில் தோல்வி கண்ட ஒரு அரசி​யல் தலை​வர் எனில் அது பழனி​சாமி தான். பழனி​சாமியை மக்​கள் நம்​பத் தயா​ராக இல்​லை. தனது பொதுச்​செய​லா​ளர் பதவியை தக்க வைத்​துக் கொள்​ளும் நோக்​கில் அவர் அதி​முக-வை நடத்​துகி​றார். தேர்​தலில் வெற்றி பெறும் ஆர்​வம் அவருக்கு கிடை​யாது.

பழனி​சாமி பெண்​களுக்கு பாது​காப்பு இல்லை என்​கி​றார். நிறைய வழக்​கு​கள் வரு​வ​தாகச் சொல்​கி​றார். பெண்​களின் ரகசி​யம் காப்​பாற்​றப்​படு​வ​தால் தான் அதிக எண்​ணிக்​கை​யில் புகார்​கள் வரு​கிறது. மேலும், மத்​திய அரசின் நிர்​பந்​தம் காரண​மாகவே வரி​கள் உயர்த்​தப்​பட்​டன.

அமை​தி​யாக இருந்த ஒடிசா மாநிலத்​தில் பாஜக ஆட்​சிக்கு வந்த பிறகு எத்​தனை கலவரங்​கள் என்​பதை பார்க்க வேண்​டும். இது​தான் பாஜக​வின் உண்மை முகம். கூட்​டணி பேச்​சு​வார்த்​தைகள் சுமுக​மாக தொடர்ந்து கொண்​டிருக்​கிறது. வரும் 23-ம் தேதிக்​குள் அனைத்​துப் பணி​களும் முடிக்​கப்​பட்டு முறை​யான அறி​விப்​பு​கள் வெளி​யாகும். இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT