தமிழகம்

புழல் சிறையில் 2 கைதிகள் தப்பிய விவகாரம்: சிறைகளில் பாதுகாப்பு தணிக்கைக்கு உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: புழல் மத்​திய சிறை​யில் இருந்து 2 கைதி​கள் தப்​பி ஓடிய​தைத் தொடர்ந்து, தமிழகம் முழு​வதும் உள்ள சிறைகளில் விரிவான பாது​காப்பு தணிக்கை நடத்த சிறைத்​ துறை டிஜிபி சந்​தீப் ராய் ரத்​தோர் சிறைத்​துறை அதி​காரி​களுக்கு உத்​தர​விட்​டுள்​ளார்.

புழல் மத்திய சிறையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நேபாள நாட்​டைச் சேர்ந்த சுதீப் போகாத்தி, போக்சோ வழக்​கில் ஆயுள் தண்​டனை பெற்று சிறை​யில் இருந்த சுரேஷ் ஆகிய 2 பேர் தப்பினர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக சிறைத் துறை​யினர் 7 பேர் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்டனர்.

இந்நிலையில், சிறைத்​துறை உயர் அதி​காரி​களு​டன் சிறைத்​துறை டிஜிபி சந்​தீப் ராய் ரத்​தோர் ஆலோ​சனை நடத்​தினார். இதனைத் தொடர்ந்து, தமிழகத்​தில் உள்ள அனைத்து மத்​திய சிறைகள், மாவட்ட சிறைகள் மற்​றும் பெண்​கள் சிறப்பு சிறைகளி​லும் உடனடி​யாக பாது​காப்பு தணிக்கை நடத்த உத்​தர​விட்​டார்.

இந்த ஆய்​வின்​போது, சிறை வளாகங்​களில் பொருத்​தப்​பட்​டுள்ள கண்​காணிப்பு கேம​ராக்​களின் செயல்​பாடு, கண்​காணிப்பு கோபுரங்​களின் நிலை, சுற்​றுச்​சுவர்​களின் உறுதித்​தன்மை, கதவு​கள் மற்​றும் பூட்​டுகளின் பாது​காப்பு, காவலர்​கள் மற்​றும் பணி​யாளர்​களின் எண்​ணிக்கை உள்​ளிட்ட முக்​கிய அம்​சங்​கள் ஆய்வு செய்​யப்​பட உள்​ளன.

மேலும், பாது​காப்பு குறை பாடுகள் குறித்த அறிக்​கையை ஒரு வார காலத்​துக்​குள் சிறைத்​துறை தலை​மையகத்​தில் தாக்​கல் செய்ய வேண்​டும் என்று சிறைத்​ துறை டிஜிபி சந்​தீப் ராய் ரத்​தோர் உத்​தர​விட்​டுள்​ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT