கிருஷ்ணசாமி | கோப்புப்படம் 
தமிழகம்

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம்: நாளை அறிவிக்கிறார் கிருஷ்ணசாமி

செய்திப்பிரிவு

அதி​முக கூட்​ட​ணி​யில் புதிய தமி​ழ​கம் கட்சி இணை​ய​வுள்​ள​தாக தகவல் வெளி​யாகியுள்​ளது. கூட்​டணி குறித்​து, அக்​கட்சி தலை​வர் கிருஷ்ண​சாமி நாளை (மார்ச் 17) அறி​விப்​பார் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

அதி​முக​ தங்​கள் தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் பாஜக, அன்​புமணி​யின் பாமக, தமிழ் மாநில காங்​கிரஸ், அமமுக உள்​ளிட்ட கட்​சிகளு​டன் தொகுதி பங்​கீடு தொடர்​பாக பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறது. இக்​கூட்​ட​ணி​யில் புதிய தமி​ழ​கம் கட்சி இடம்​பெறவுள்​ள​தாக தகவல் வெளி​யாகியுள்​ளது.

          

இதுகுறித்து அதி​முக நிர்​வாகி​கள் கூறுகை​யில், “கடந்த 2019-ல் இருந்து புதிய தமி​ழ​கம் கட்சி தலை​வர் கிருஷ்ண​சாமி எங்​களு​டன் பயணித்து வரு​கி​றார். அவருடன் தொடர்ந்து பயணிக்க விரும்​பு​கி​றோம். எங்​கள் கூட்​ட​ணி​யில் கொண்​டுவர தேவை​யான முயற்சி எடுத்​து​வ​ரு​கி​றோம். அவர் எங்​கள் கூட்​ட​ணி​யில் வரு​வார் என நம்​பிக்கை உள்​ளது” என்​ற​னர்.

புதிய தமி​ழ​கம் கட்சி வட்​டாரத்​தில் கேட்​ட​போது, “அதி​முக கூட்​ட​ணி​யில் பேச்​சு​வார்த்தை நடப்​பதை மறுக்​க​முடி​யாது. கூட்​டணி பேச்​சு​வார்த்தை நல்​லபடி​யாக முடி​யும் என்ற நம்​பிக்கை இருக்​கிறது. 95 சதவீதம் அதி​முக கூட்​ட​ணி​யில் செல்ல வாய்ப்பு உள்​ளது. கிருஷ்ண​சாமி ஓரிரு நாளில் கூட்​டணி நிலைப்​பாட்டை தெரி​விப்​பார்” என்​ற​னர். அதி​முக கூட்​ட​ணி​யில் புதிய தமி​ழ​கம் கட்சி 5 தொகு​தி​கள் வரை எதிர்​பார்ப்​ப​தாக கூறப்​படுகிறது.

SCROLL FOR NEXT