தொகுதி பங்கீட்டு உடன்பாட்டை உறுதிப்படுத்திய புதுச்சேரிக்கான என்டிஏ கூட்டணித் தலைவர் ரங்கசாமி. உடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, புதுச்சேரி பாஜக அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர்.

 
தமிழகம்

புதுச்சேரியில் கூட்டணி இழுபறி முடிவுக்கு வந்தது: என்டிஏ தொகுதி பங்கீடு அறிவிப்பு

என்.ஆர்.காங்கிரஸ் 16, பாஜக 10, அதிமுக 2, லஜக 2 இடங்களில் போட்டி

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்​சேரி என்​டிஏ கூட்​ட​ணி​யில் தொகு​திப் பங்​கீடு கடந்த ஒரு வார​மாக இழுபறி​யாக இருந்த நிலை​யில், என்​.ஆர்​.​காங்​கிரஸ் - பாஜக இடையே நேற்று சுமுக உடன்​பாடு ஏற்​பட்​டது. என்​.ஆர்​.​காங்​கிரஸ் 16 இடங்​கள், பாஜக 10 இடங்​கள், அதிமுக, லஜக தலா 2 இடங்​களில் போட்​டி​யிடுகின்றன.

புதுச்​சேரி​யில் தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ) அரசு ஆட்​சி​யில் உள்​ளது. என்​ஆர்​.​காங்​கிரஸ் தலை​வரும், முதல்​வரு​மான ரங்​க​சாமி இக்​கூட்​ட​ணிக்கு தலைமை வகிக்​கிறார். புதுச்​சேரிக்கு மாநில அந்​தஸ்து தரு​வது உள்​ளிட்ட விவ​காரங்​களில் மத்​திய அரசு மீது அதிருப்தி நில​விய​தால், இதே ​கூட்​ட​ணி​யில் ரங்​க​சாமி நீடிப்​பாரா என்ற சந்தேகம் எழுந்​தது. இந்த சூழலில், கடந்த மாதம் காரைக்​காலுக்கு வந்த மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவை ரங்​க​சாமி சந்​தித்​து, என்​டிஏ கூட்​ட​ணி​யில் தொடர்​வதை உறுதி செய்​தார்.

          

இதைத் தொடர்ந்​து, சில நாட்​களுக்கு முன்பு புதுச்​சேரி வந்த பாஜக தேர்​தல் பொறுப்​பாள​ரான மத்​திய அமைச்​சர் மன்​சுக் மாண்​ட​வி​யா, பாஜக மேலிடப் பொறுப்​பாளர் சுரானா ஆகியோர் ரங்​க​சாமி​யுடன் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அப்​போது, என்​டிஏ கூட்​ட​ணி​யில் என்​.ஆர்​.​காங்​கிரஸுக்கு 16 இடங்​கள், பாஜக மற்​றும் கூட்​டணி கட்​சிகளான அதி​முக, லட்​சிய ஜனநாயகக் கட்​சிக்கு 14 இடங்​கள் என்று முடி​வானது.

இந்த நிலை​யில், லாட்​டரி அதிபர் மார்ட்​டினின் மகன் ஜோஸ் சார்​லஸின் லட்​சிய ஜனநாயகக் கட்​சி, என்​டிஏ அரசை விமர்​சித்​த​தால், அக்​கட்​சியை கூட்​ட​ணி​யில் சேர்க்​கக் கூடாது என்று ரங்​க​சாமி எதிர்ப்பு தெரி​வித்​தார். அதே நேரம், பாஜக அமைச்​சர் ஜான்​கு​மார் அக்​கட்​சி​யுடன் இணைந்து செயல்​பட்டு வரு​வ​தாக​வும், லஜக வளர்ச்​சிக்கு பாஜக உறு​துணை​யாக இருப்​ப​தாக​வும் விமர்​சனம் எழுந்​தது.

இந்த அதிருப்​தி​யால், தொகு​திப் பங்​கீட்டு பேச்​சு​வார்த்​தையை ரங்​க​சாமி கடந்த சில நாட்​களாக தவிர்த்​தார். தனது அதிருப்​தியை கட்சி நிர்​வாகி​கள் மூலம் பாஜக தலை​மைக்​கும் தெரியப்​படுத்​தி​னார். இதைத் தொடர்ந்​து, தொகு​திப் பங்​கீடு பேச்​சு​வார்த்​தைக்​காக, மத்​திய அமைச்​சர் மன்​சுக் மாண்​ட​வியா கடந்த 19-ம் தேதி மீண்​டும் புதுச்​சேரிக்கு வந்​தார். ஆனால், அதை புறக்​கணிக்​கும் வித​மாக, மதுரை, திருச்​செந்​தூரில் சுவாமி தரிசனம் செய்​வதற்​காக ரங்​க​சாமி புறப்​பட்​டுச் சென்​றார். இதனால், கூட்​ட​ணி​யின் மற்ற கட்​சி​யினருடன் மன்​சுக் மாண்​ட​வியா பேச்​சு​ நடத்​தி​னார். ரங்​க​சாமியின் வரு​கைக்​காக காத்​திருந்​தார்.

இதற்கிடையே, பாஜக மேலிட நிர்​வாகி​கள் நேரடி​யாக ரங்​க​சாமி​யிடம் பேசினர். இந்நிலையில், நேற்று புதுச்​சேரி திரும்​பிய ரங்​க​சாமி, கூட்​டணி பேச்​சு​வார்த்தை குறித்து எந்த அறி​விப்​பை​யும் வெளி​யி​டா​மல் மங்​கலம், தட்​டாஞ்​சாவடி ஆகிய 2 தொகு​தி​களில் போட்​டி​யிட திட்​ட​மிட்​டு, வேட்​புமனுக்​களை தாக்​கல் செய்​தார்.

அதன்​பிறகு, பிற்​பகலில் மத்​திய அமைச்​சர் மன்​சுக் மாண்​ட​வி​யாவை ரங்​க​சாமி சந்​தித்​தார். அப்​போது நடந்த பேச்​சு​வார்த்​தை​யில் சுமுக உடன்​பாடு ஏற்​பட்​டது. இதைத் தொடர்ந்​து, செய்​தி​யாளர்​களிடம் அவர்​கள் கூறிய​தாவது:

முதல்​வர் ரங்​க​சாமி: என்​டிஏ கூட்​ட​ணி​யில் தொடர்​கிறோம். அதில் மாற்​றம் இல்​லை. புதுச்​சேரிக்​காக, மத்​திய அரசு பல நலத் திட்​டங்​களை அறி​வித்​துள்​ளது. குறிப்​பாக பிரதமர் மோடி ரூ.3 ஆயிரம் கோடி திட்​டங்​களை அறி​வித்​துள்​ளார். மீண்​டும் என்​டிஏ அரசு வந்​தால், மக்​கள் நலத் திட்​டங்​களை தொடர்ந்து செயல்​படுத்​தும். என்​டிஏ கூட்​ட​ணி​யில் புதி​தாக ஒரு கட்சி (லஜக) இணைந்​துள்​ளது. ‘‘இது கூட்​ட​ணிக்கு இன்​னும் பலமாக இருக்​கும்’’ என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தெரி​வித்​தார். இதையடுத்​து, புதிய கட்​சி​யும் கூட்​ட​ணி​யில் இணைந்​துள்​ளது. என்​டிஏ கட்​சிகள் போட்​டி​யிடும் தொகு​தி​கள் குறித்து விரை​வில் தெரி​விப்​போம்.

மத்​திய அமைச்​சர் மாண்​ட​வி​யா: முதல்​வர் ரங்​க​சாமி​தான் புதுச்​சேரிக்​கான என்​டிஏதலை​வர். அவர் தலை​மை​யில் தேர்​தலைச் சந்​திக்​கிறோம். என்​.ஆர்​.​காங்​கிரஸ் 16 இடங்​களில் போட்​டி​யிடும். பாஜக, அதி​முக, லஜக 14 இடங்​களில் போட்​டி​யிடும். என்​டிஏ கூட்​டணி புதுச்​சேரி​யில் மீண்​டும் ஆட்சி அமைக்​கும். என்​.ஆர்​.​காங்​கிரஸ் புதுச்​சேரிக்கு மாநில அந்​தஸ்து கோரியது. தேர்​தல் வாக்​குறு​தி​யில் இதுபற்றி தெரிவிக்​கப்​படும். பிரதமர் மோடி, உள்​துறை அமைச்​சர் அமித் ஷா புதுச்​சேரிக்கு பிரச்​சாாரத்​துக்கு வரு​வார்​கள். இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

தொகு​திப் பங்​கீட்​டில் என்​.ஆர்​.​காங்​கிரஸ் 16, பாஜக 10, அதி​முக, லஜகவுக்கு தலா 2 தொகு​தி​கள் ஒதுக்கப்படும் என தெரிகிறது. கடந்த 2021 சட்​டப்​பேரவைதேர்​தலில் அதி​முக 5 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டு, ஒரு இடத்​தில்​கூட வெற்றி பெறாத​தால் அக்​கட்​சிக்கு தொகு​தி​களின் எண்​ணிக்கை குறைக்​கப்​பட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது. கடந்த முறை 9 தொகு​தி​களில் போட்​டி​யிட்ட பாஜக இம்​முறை 10 தொகு​திகளில் போட்​டி​யிடு​கிறது.

என்டிஏ கட்​சிகளுக்​கான தொகு​தி​கள் ஒதுக்​கீடு குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறி​விப்பு வெளி​யாகிறது. புதுச்​சேரி​யில் வேட்​புமனு தாக்​கலுக்​கான கடைசி நாள்​ 23-ம்​ தேதி (திங்​கள்​கிழமை) என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT