காங்கிரஸ் எம்.பி வைத்​திலிங்​கம்

 
தமிழகம்

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று புதுச்சேரி காங். தலைவர் வைத்திலிங்கம் ராஜினாமா

செய்திப்பிரிவு

புதுச்சேரி: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தோல்வி அடைந்​த​தால், புதுச்​சேரி மாநில காங்​கிரஸ் தலை​வர் வைத்​திலிங்​கம் தனது பதவியை ராஜி​னாமா செய்​வ​தாக, கட்​சித் தலை​மைக்கு கடிதம் அனுப்​பி​யுள்​ளார்.

நடந்​து​முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலின் போது, புது​வை​யில் இண்​டியா கூட்​ட​ணி​யில் யார் தலைமை வகிப்​பது என தொடங்கி காங்​கிரஸ் - திமுக இடையே கடும் மோதல் ஏற்​பட்டது. இரு கட்​சிகளுக்கும் இடையே நல்ல உடன்பாடு ஏற்​ப​டா​மலேயே, கூட்​டணி ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. கூட்​டணி ஒப்​பந்​தத்தை மீறி, திமுக, விசிக, இந்​திய கம்​யூனிஸ்ட் போட்​டி​யிட்ட இடங்​களில் காங்​கிரஸ் போட்டி வேட்​பாளர்​களை நிறுத்​தி​யது. இது மேலும் அதிருப்​திக்கு ஆளாக்​கி, தேர்​தல் முடி​வில் எதிரொலித்​தது.

இவ்​வாறு கூட்​டணி ஒப்​பந்​தத்தை மீறி, கூட்​டணி கட்​சிகளின் தொகு​தி​களில் தங்​கள் வேட்​பாளர்​களை நிறுத்​தி​யதை ‘நட்பு போட்​டி’ என்ற வார்த்​தையை பயன்​படுத்தி காங்​கிரஸ் தரப்​பில் விளக்​கம் அளிக்​கப்​பட்​டது.

இவ்​வாறான நட்பு போட்​டி​யில் ஈடு​பட்​டு, காங்​கிரஸ் மொத்​தம் உள்ள 30 தொகு​தி​களில் 22 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டது. ஆனால் ஒரு தொகு​தி​யில் மட்​டுமே வென்று படு​தோல்வி அடைந்​தது. குறிப்​பாக, தற்​போது புதுச்​சேரி​யின் மக்​களவை உறுப்​பின​ராக இருக்​கும் மாநில காங்​கிரஸ் தலை​வர் வைத்​திலிங்​கம் தட்​டாஞ்​சாவடி தொகு​தி​யில் முதல்​வர் ரங்​க​சாமியை எதிர்த்து போட்​டி​யிட்டார்.

அந்​தத் தொகு​தி​யில் போட்​டி​யிட இண்​டியா கூட்​ட​ணி​யில், இந்​திய கம்​யூனிஸ்ட் அனைத்து வேலைகளை​யும் செய்த நிலை​யில், வைத்​திலிங்​கம் இவ்​வாறு போட்​டி​யிடு​வதற்கு கடும் விமர்​சனம் எழுந்​தது. அவர், தேர்​தலில் தோற்​று, நான்​காம் இடத்தை பிடித்​தார். டெபாசிட் கூட வாங்​க​வில்​லை. பிற தொகு​தி​களி​லும் ஏற்​பட்ட தோல்​வி​யால், புதுச்​சேரி காங்​கிரஸில் வைத்​திலிங்​கத்​துக்கு எதிர்ப்பு கிளம்​பியது.

‘வைத்​திலிங்​கம் மாநிலத் தலை​வர் பதவியை வகிக்க கூடாது. விலக வேண்​டும்’ என்று கூறி புதுச்​சேரி காங்​கிரஸ் நிர்​வாகி​கள், கட்சி அலு​வல​கத்தை முற்​றுகை​யிட்டு போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இந்த நிலை​யில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தோல்விக்கு தார்​மீக பொறுப்பு ஏற்​று, மாநில தலை​வர் பதவியை ராஜி​னாமா செய்​வ​தாக அகில இந்​திய தலை​வர் மல்​லி​கார்​ஜூன கார்​கே, ராகுல் காந்தி எம்​.பி. ஆகியோ​ருக்கு வைத்​திலிங்​கம் நேற்று கடிதம் அனுப்​பியுள்​ளார்​.

SCROLL FOR NEXT