கோப்புப் படம் | புதுச்சேரி சட்டமன்றம் 
தமிழகம்

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்: 30 தொகுதிகளில் 294 பேர் போட்டி

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 30 தொகுதிகளில் 294 பேர் களத்தில் உள்ளனர்.

புதுச்சேரியில் 4 பிராந்தியங்கள் உள்ளன. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு கடந்த 16-ம் தேதி மனு தாக்கல் தொடங்கி 23-ம் தேதி நிறைவடைந்தது. 442 வேட்பாளர்கள் 514 மனுக்களை தாக்கல் செய்தனர். மனுபரிசீலனை செய்த போது 365 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

          

வேட்பு மனு வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும். ஒரு மனுவை விட கூடுதலாக போட்ட மனுக்கள் நீக்கப்பட்டன. 71 மனுக்கள் வாபஸானது. தற்போது களத்தில் 294 வேட்பாளர்கள் உள்ளனர். வரும் ஏப்ரல் 9-ம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் தேர்தல் நடக்கவுள்ளது. அதன்படி தற்போது தொகுதி தோறும் களத்தில் உள்ள வேட்பாளர்கள் வருமாறு:

மண்ணாடிப்பட்டு - 11

திருபுவனை - 11

ஊசுடு - 5

மங்கலம் - 9

வில்லியனூர - 12

உழவர்கரை - 14

கதிர்காமம் - 9

இந்திராநகர் - 8

தட்டாஞ்சாவடி - 10

காமராஜ் நகர் -10

லாஸ்பேட் - 11

காலாப்பட்டு - 7

முத்தியால்பேட் - 11

ராஜ்பவன் - 7

உப்பளம் - 6

உருளையன்பேட்டை - 13

நெல்லித்தோப்பு - 14

முதலியார்பேட்டை - 14

அரியாங்குப்பம் - 11

மணவெளி - 8

ஏம்பலம் - 8

நெட்டப்பாக்கம் - 14

பாகூர் - 9

மாஹே - 8

ஏனாம் - 13

நெடுங்காடு - 6

திருநள்ளார் - 9

காரைக்கால் வடக்கு - 9

காரைக்கால் தெற்கு - 8

நிரவி டிஆர்பட்டிணம் - 9

SCROLL FOR NEXT